மில்லியன் கணக்கானோரை கவர்ந்த ஒரு கால் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்..!!

Read Time:1 Minute, 49 Second

timthumbசீனாவில் ஒரு கால் இல்லாத போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மில்லியன் கணக்கானோரை கவர்ந்துள்ளார்.

ஸீ குய்மிங் எனும் இப்பொலிஸ் உத்தியோகத்தர் 26 வயதானவர். 9 வயதில் வீதி விபத்தொன்றில் சிக்கி தனது ஒரு காலை இழந்தார்.

செல்லிடத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழிலை ஆரம்பித்த அவர், தொலைபேசிகளை விற்கும் இரு நிறுவனங்களின் உரிமையாளராக விளங்குகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொண்டர் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றுவதற்கு விண்ணப்பித்தார். எதிர்பார்த்ததைப் போலவே அவரை பொலிஸ் திணைக்களம் நிராகரித்தது.

எனினும், மீண்டும் மீண்டும் விண்ணப்பங்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஸீ குய்மிங்.

தான் விபத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்ததால் தனது அனுபவமானது மற்றவர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.

இறுதியில் அவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

குய்மிங் பணியில் ஈடுபடும் காட்சி அடங்கிய வீடியோ சீன சமூக வலைத்தளமொன்றில் வெளியிடப்பட்டபோது 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் அதை லைக் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..!!
Next post காதல் போட்டியில் மாணவர்கள் கத்தியால் குத்தியதாக பிளஸ்–2 மாணவி நாடகம்..!!