சீனாவில் மருத்துவமனை புல்டோசரால் இடிப்பு: 6 பேர் பலி…!!

Read Time:2 Minute, 10 Second

3ca37171-d38c-4bc2-8af9-0e0c45369582_S_secvpfசீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஷெங்ஷுயூ பல்கலைகழகத்தில் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. அதை ஒட்டி ரோடு விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனைக் கட்டிடம் இருந்ததால் அதை வழங்க நிர்வாகம் மறுத்து விட்டது.

இதுகுறித்து பிரச்சினை இருந்து வந்த நிலையில் மருத்துவமனையின் கட்டிடத்தை இடித்து அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து மருத்துவமனையின் ஒருபகுதி முன் அறிவிப்பு எதுவும் இன்றி புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டது.

அப்போது, அங்கு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். ‘எக்ஸ்ரே’வும் எடுக்கப்பட்டு இருந்தது. மருத்துவமனை கட்டிடம் திடீரென இடிக்கப்பட்டதால் அங்கிருந்த டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் நர்சுகள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இருந்தும் இச்சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. அவர்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ரூ.4 கோடி மதிப்பிலான உபகரணங்களும் சேதமடைந்தன.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவமனை நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆன் லைனில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே அங்கு ஆட்கள் யாருமின்றி அப்பகுதி காலி செய்யப்பட்டிருப்பதாக கருதி இடித்ததாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்பு…!!
Next post கூடலூர் அருகே விவசாயி குடும்பத்தினர் சாவில் மர்மம்: போலீசார் தீவிர விசாரணை…!!