மெட்டல் பாடி, 5 இஞ்ச் திரையுடன் ரெட்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்…!!

Read Time:1 Minute, 44 Second

TYUUஸ்மார்ட்போன் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி ரெட்மி 3 போன் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன சந்தையில் இன்று விற்பனைக்கு வந்துள்ள ரெட்மி 3 ஸ்மார்ட்போனில் 5 எச்.டி. திரை, 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. உள் சேமிப்பு, 13 எம்.பி. பின்புற கேமரா, 8 எம்.பி. முன்புற கேமரா மற்றும் அண்ட்ராய்டு லாலிபாப் உடன் கூடிய MIUI 7 மென்பொருள் ஆகிய வசதிகள் உள்ளன. முக்கியமாக 4100mAh பேட்டரி திறனுடன் ரெட்மி 3 வெளிவந்துள்ளது. மேலும் மெட்டல் பாடி, இரட்டை சிம் ஆகிய வசதிகளும் உள்ளது. இந்திய மதிப்பில் ரெட்மி 3-ன் விலை தோராயமாக ரூ.7000 ஆகும்.

இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ரெட்மி 3 எப்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்னதாக ரெட்மி 1எஸ், 2 மற்றும் ரெட்மி 2 ப்ரைம் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து, உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று சீனாவில் ரெட்மி 3 போன் வெளியிடப்பட்டுள்ளது. ரெட்மி 3, எம்ஐ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் பள்ளி மீது ரஷ்யா விமான தாக்குதல்: 8 குழந்தைகள் பலி…!!
Next post பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது…!!