இதயத்துடிப்பை நிறுத்தும் ஒரு கணம்: வேனை மோதும் விதமாக வந்த லொறி…!!
பிரித்தானியாவில் லொறி ஒன்று நொடிப்பொழுதில் வேனை முந்திச்செல்லும் அபாயகரமான வீடியோ வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Ulceby பகுதியில் உள்ள ரயில்பாதையை கடப்பதற்காக நீல நிற வேன் ஒன்று வந்துகொண்டிருக்கிறது, அதன் பின்னால் சற்றும் எதிர்பாரத வண்ணம், லொறி ஒன்று இந்த வேனினை மோதும்விதமாக முந்திக்கொண்டு வேகமாக வந்து ரயில் பாதையை கடந்து செல்கிறது.
பின்னால், வந்த வேன் மெதுவாக ரயில்பாதையை கடந்து செல்கிறது, இது தொடர்பான வீடியோவை பார்த்த பிரித்தானிய போக்குவரத்து பொலிசார், இவ்வாறு வாகனம் ஓட்டும் காரணத்தால், அபாயகரமான விளைவுகளை ஏற்படும் என்று கூறியதுள்ளதோடு மட்டுமல்லாமல், அங்கு இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்பது குறித்து பேசவேண்டும், எனவே இரு ஓட்டுநர்களும் இது தொடர்பாக பேசுவதற்கு முன்வர வேண்டும் எனக்கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
Average Rating