குறிப்புப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டமைக்கு கண்டனம்…!!

Read Time:4 Minute, 9 Second

yuuஎம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்துடன் இணைப்பைக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால், நீதிமன்ற சட்ட வரம்புக்குள் இடம்பெற்ற இளைஞர் ஒருவரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் குறிப்பு புத்தகங்கள் பலவந்தமாக பறிமுதல் செய்யப்பட்டமை குறித்து கடும் கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மேற்படி இளைஞரின் மரணம் உள்ளூர் சமூகத்தினர் மத்தியில் நீதிக்கான கோஷத்தை எழுப்பியிருந்ததுடன் அந்த சம்பவம் பொதுமக்கள் அனைவரதும் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

நீதிவான் நீதிமன்ற விசாரணைகளின் போது நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டமை மேலும் கவலையை தோற்றுவிக்க காரணமாகியுள்ளது.

இந்த விவகாரத்தை இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் வேறாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த மாகாண நிருபர்கள் நீதிமன்றத்தில் தமது நியாயபூர்வமான உத்தியோகபூர்வ கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தனர். இதன்போது எந்தவொரு கட்டத்திலும் தலைமை நீதிபதியால் ஊடகவியலாளர்கள் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறவோ அன்றி குறிப்புகள் எடுப்பதை நிறுத்தவோ புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவோ கோரப்படவில்லை. அத்துடன் அங்கு எவ்விடத்திலும் ஊடகவியலாளர்களின் செயற்பாட்டுக்கு தடை விதிக்கும் அடையாளப் பலகைகளும் காணப்படவில்லை.

இந்நிலையில் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரால் பறிமுதல் செய்யப்பட்ட குறிப்புப் புத்தகங்களில் சில சம்பந்தப்பட்ட பக்கங்கள் கிழித்து அகற்றப்பட்ட பின் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன.

வளாகத்துக்குள் இடம்பெற்ற இளைஞரின் மரணம் குறித்து பொலிஸாரின் நடத்தை சம்பந்தமாக இடம்பெற்ற நீதிவான் விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்த தனது மேலதிகாரிகளின் சட்டவிரோதமான உத்தரவில் அந்த நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் இந்த தவறான நடவடிக்கையை எடுத்துள்ளதாக நாம் நம்புகிறோம்.

இந்நிலையில் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களுக்கு அவர்களது தொழில் ரீதியான கடமைகளை ஆற்றுவதற்கான அரசியல் அமைப்பு ரீதியாகவுள்ள உரிமைகளையும் பொதுமக்களின் பரந்த அக்கறைக்குரிய வழக்கு ஒன்று தொடர்பான பொது விசாரணை சம்பந்தமாக தகவலறிவதற்கான பொதுமக்களது உரிமையும் நேரடியாக தாக்கும் வகையில் அமைந்த இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கோருகிறது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் சகோதரியான சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது…!!
Next post உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…?