தினமும் இரண்டு நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள்…!!

Read Time:4 Minute, 0 Second

2min-500x500அவதி அவதியாக காலை எழுந்ததும் அலுவலகத்தை நோக்கி பறக்கும் வாழ்க்கை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது கூட குறைந்துவிட்டது. திருமணத்தின் போது கிடைக்கும் அந்த பத்து நாள் விடுமுறை வரை தான் ஆசையும், மோகமும். பிறகு மீண்டும் அதே அவதி அவதியான அவசரக்கால நடவடிக்கை போன்ற வாழ்க்கை தான்.

தினமும் நீங்கள் ஒரு இரண்டு நிமிடம் சில விஷயங்களுக்காக செலவளித்தால் உங்கள் இல்லற வாழ்க்கையும் காதலில் திளைத்து பெருமகிழ்ச்சி அடையும். இதற்காக நீங்கள் காசு, பணம் ஏதும் செலவு செய்ய வேண்டாம். வீட்டிலே இருந்தப்படி உங்கள் மனைவியுடன் சில செயல்பாடுகளில் ஈடுபட்டாலே போதுமானது….

தீண்டுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல்

காலை எழுந்தவுடன் இதமாக கட்டிப்பிடித்துக் கொள்ளுதல், கை, கால்களை தீண்டி பிடித்துவிடுவது, செல்லமான முத்தம். இந்த மூன்றும் நீங்கள் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், மன அழுத்தம் இன்றி இருக்கவும் உதவும்.

நேர்மறையான பேச்சு

காலை எழுந்ததும் உங்கள் மனைவி, பிள்ளை, பெற்றோருடன் நேர்மறையான பேச்சில் ஈடுபடுவது. முக்கியமாக அரசியல் பேசிவிட வேண்டாம். நல்ல விஷயங்களை பேசுங்கள், நல்ல எண்ணங்களை அவர்களது மனதினுள்ளே விதைக்க செய்யுங்கள்.

தேநீர் ஊற்றிக் கொடுப்பது

தினமும் இல்லையெனிலும் கூட, அவ்வப்போது உங்கள் மனைவி எழுந்திருக்கும் முன்பு, நீங்கள் அவர்களுக்கு தேநீர் ஊற்றி கொடுத்து பாருங்கள். குறைந்தது ஒரு வாரத்திற்காவது அனைவரிடமும், என் கணவர் தேநீர் ஊற்றிக்கொடுத்தார் என பெருமையாக பேசுவார்கள்.

எழுப்பிவிடுவது

அவர்களுக்கு முன்பு எழுந்து அவர்களை எழுப்புவது. அதெற்கென அவர்கள் நேற்றிரவு அதிக வேலை செய்து அலுத்து, சோர்ந்து உறங்கும் போது கோழிக் கூவும் நேரத்தில் எழுப்பிவிட்டு திட்டு வாங்கிக்கொள்ள வேண்டாம். சாதாரண நாட்களில் எழுப்பிவிடுங்கள். மேல் கூறியவாறு தேநீரும் சேர்த்துக் கொடுத்தால் உறவில் இன்பம் பெருகும்.

குறுஞ்செய்திகள்

வீட்டில் இருந்து அலுவலகம் சென்றவுடன் மனைவியை மறந்துவிட வேண்டாம். அலுவலகம் சென்றதும், சென்றடைந்துவிட்டேன் என்ற ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். நேரம் கிடைக்கும் போது அழைத்து பேசுங்கள்.

ஆங்காங்கே சில குறிப்புகள்

வீட்டில் ஆங்காங்கே அவர்களது கண் பார்வை படும் இடங்களில் சில குறிப்புக்கள் எழுதி வையுங்கள். அவர்களை புகழ்ந்து, அல்லது ரொமாண்டிக் வாசகங்கள் போன்றவை. சுயமாக வரவில்லை என்றால், கூகிளில் இருந்து சுட்டாவது நல்ல குறிப்புகளாக எழுதி வையுங்கள். பிறகு உங்கள் இல்லறமும் ஓர் அமர காவியம் போல செம்மையாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 49 வயதான சீனப் பிரஜை கைது…!!
Next post ஜீன்ஸ் நழுவியதால் அவமானப்பட்ட பெண்! (VIDEO)…!!