மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…!!

Read Time:1 Minute, 23 Second

d6fab1bb-649d-4971-a9fa-b26dd7a96457_S_secvpfஅட்லாண்ட்டிக் பெருங்கடலையொட்டி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த பனிப்புயலின் விளைவாக சாலைகளில் இரண்டரை அடிவரை உறைப்பனி மூடலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது.

குறிப்பாக, வாஷிங்டன், நியூயார்க், பால்டிமோர், விர்ஜினியா, கரோலினா, பிலிடெல்பியா, மேரிலாண்ட் போன்ற பகுதிகளை இந்த பனிப்புயல் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் கடுமையாக தாக்கலாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் இம்மாநிலங்கள் வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நல்லதா என்பதை கண்டுபிடிக்க வேண்டுமா…?
Next post சவுதி அரேபியாவில் செஸ் விளையாட்டுக்கு தடை: மதகுரு அறிவிப்பு…!!