ருட்டன்ஹொவ்மன் சக்ரவர்த்தியின் தாடிக்கு சேதம்..!!

Read Time:1 Minute, 42 Second

23434வரலாற்றுப் புகழ் மிக்க எகிப்திய சக்கரவர்த்தி ருட்டன்ஹொவ்மன்யின் சிலையின் தாடிப்பகுதியை சேதமாக்கியதாக கருதப்படும் அரும்பொருள் காட்சியகத்தின் எட்டு ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

3 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த சிலையினை ஆராய்ந்த விசாரணை அதிகாரிகள் தாடிப்பகுதி அகற்றப்பட்டு, பசை கொண்டு ஒட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எகிப்திய தலைநகர் கெய்ரோவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிலையினை பார்க்க தவறுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சக்கரவர்த்தியின் சிலையின் தாடிப்பகுதி சேதமடைந்ததற்கு மாறுபட்ட காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தவறுதலாக சிலையின் தாடிப்பகுதி திண்ம பொருள் ஒன்றுடன் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாடிப்பகுதி
அகற்றப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாடிப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் வெற்றி பெறவில்லை என எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆச்சரியத்திற்குரிய கால்களுடனான மீன் இனம்…!!
Next post ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார் 8 பேர் பலி…!!