பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றத் தடை…!!

Read Time:2 Minute, 18 Second

43565கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வதுடன், பாரவூர்தியின் கூரையின் மேல் பொருட்கள் ஏற்றுவதையும் தவித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பாரவூர்தி கூட்டுறவுச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செ.ஜெயகுமார் தலைமையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக வட மாகாண கூட்டுறவு விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சிறப்பு விருந்தினராக வட மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார்,கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பொ.கணேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரவூர்திகளின் கூரையின்மேல் பொருட்கள் ஏற்றுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே கடந்த நிர்வாகம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தமை சம்பந்தமாக உறுப்பினர்களிடையே பலத்த வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டன.

இதன் போது, பாரவூர்திகள் அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றுவதினால் வாகனங்கள் பாதிக்கப்படுவதுடன் பொருட்கள் அழிவடைந்து சிலசமயங்களில் உயிர் சேதங்களும் எற்படுகின்றன. இதனால் ஏனைய பாரவூர்திகள் பொருட்களை ஏற்ற முடியாமல் போவதுடன் குறிப்பிட்ட சிலரே தொழிலை மேற்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிபியாவில் எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த தீவிரவாதிகள்: 30 லட்சம் பீப்பாய்கள் சேதம்…!!
Next post திருமண விழாவில் மணமகளை அழவைத்த திகில் நடனம்…!!