12 இலட்சம் ரூபாவுக்கு ரயில் சீசன் டிக்கெட் வாங்கி துடைப்பான்களுக்கான கபோர்ட்டில் அமர்ந்து பயணிக்கும் நபர்…!!
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் வருடாந்தம் 12 இலட்சம் ரூபா செலவில் பருவகால பயணச்சீட்டு (சீசன் டிக்கெட்) பெற்றுக்கொண்டு ரயிலில் துடைப்பான்களை வைக்கப் பயன்படுத்தப்படும் கபோர்ட் ஒன்றில் அமர்ந்தவாறு பயணம் செய்கிறார்.
இந் நபர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.
ஆனால், தான் பிரிட்டனின் இப்ஸ்விச் நகரில் வசிப்பவர் எனவும் வாராந்தம் 5 நாட்கள் தொழிலுக்காக லண்டனுக்குச் சென்று திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரயிலில் ஆசனத்தைப் பெற்றுக்கொள்வது சிரமமாக உள்ளதால் மேற்படி கபோர்ட்டில் அமர்ந்து பயணம் செய்வதற்கு தான் தீர்மானித்ததாக அவர் கூறுகிறார்.
“காலையில் பயணம் செய்யும்போது எனக்கு ஆசனமொன்று கிடைக்கும். ஆனால், மாலை 6.30 மணிக்கு வீடு திரும்பும்போது அதிக சன நெரிசல் காரணமாக ஆசனம் கிடைப்பது சிரமம்.
இதனால், ரயில் பெட்டியொன்றில் துடைப்பான்கள், வாளிகளை வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கபோர்ட் ஒன்றில் தான் அமர்ந்துகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 6000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 12 இலட்சம் ரூபா) பெறுமதியான பருவகாலச்சீட்டை வாங்கி இவர் ரயிலில் பயணம் செய்கிறார்.
ஆனால், வாளிகள், துடைப்பான்களுக்கு அருகில் அமர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating