தாய்வான் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய தீவுக்கு விஜயம்…!!
Read Time:1 Minute, 6 Second
பதவிலிருந்து விலகவுள்ள தாய்வான் ஜனாதிபதி மா யிங்-ஜியோ, தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தீவுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.
தாய்வானினால் உரிமை கோரப்படும் ‘தாய்பிங்’ எனப்படும் இந்த தீவை சீனா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் புருனை ஆகிய அண்டை நாடுகளும், உரிமை கோரி வருகின்றன.
ஜனாதிபதி மா யிங்-ஜியோ, சீனாவுடன் நட்பு ரீதியான உறவை கொண்டவர் என்பதுடன், அவர் எதிர்வரும் நான்கு மாத காலங்களுக்குள் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இந்தநிலையில், புதிதாக தாய்வானின் ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்கும் சாய் இங்-வென், சீன எதிர்ப்பு கொள்கையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating