ஸ்ரீவிக்ரம இராஜசிங்கனின் 185ஆவது குருபூசை விழா…!!

Read Time:2 Minute, 12 Second

gfdgfகண்­டியை ஆட்சி புரிந்த கடைசி மன்­ன­னான ஸ்ரீ விக்­ரம இராஜ­சிங்­கனின் 185 ஆவது குரு­பூசை விழா நாளை 30 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு வேலூர் புதிய பஸ் நிலை­யத்தில் உள்ள மன்­னரின் முத்து மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வி­ருப்­ப­தாக மன்­னரின் எட்­டா­வது பரம்­ப­ரையைச் சேர்ந்­த­வரும் ஸ்ரீ விக்­ரம இரா­ஜ­சிங்­கனின் குடும்ப ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான வி. அசோக் ராஜா மெட்­ரோ­வுக்கு தக­வல்­களை வழங்­கி­யுள்ளார்.

இவ்­வி­ழாவில் மன்­னரின் ஆறா­வது பரம்­ப­ரையைச் சேர்ந்த திரு­மதி மீனாட்சி அம்மாள் (97 வயது) தலைமை வகிக்க உள்­ள­துடன், மதுரை சென்னை மற்றும் வேலூரில் வசிக்கும் மன்­னரின் வாரி­சு­களும் இக்­கு­ரு­பூ­ஜையில் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ள­தாக வி. அசோக்­ராஜா மேலும் தக­வல்­களை வழங்­கி­யுள்ளார்.

18-/02/1815இல் ஆங்­கி­லே­யரால் விக்­ரம இராஜ­சிங்கன் கைது செய்­யப்­பட்டு 06.03.1815இல் கொழும்புக்கு கொண்டு வரப்­பட்டு கொழும்பு கோட்டை (இன்று சிலிங்கோ ஹவுஸ்) ராஜபக்ஷ வளவில் சிறை வைக்­கப்­பட்டார்.

பின்னர் 24/01/1816இல் மன்­னரும் அவரின் துணை­வி­யர்கள் நான்கு பேரும் கொழும்பு காலிமுகத்திடலிலிருந்து கோர்ஸ்­வலிஸ் கப்பல் மூல­மாக சென்னை அழைத்துச் செல்­லப்­பட்டு வேலூரில் சிறை வைக்­கப்­பட்­டனர். கப்பல் சென்னை துறை­மு­கத்தை எட்­டிய தரு­ணத்தில் பட்­டத்து ராணி சாவித்­திரி தேவி இறந்து விட்டார்.

பின்னர் 1832 ஜன­வரி 30இல் தனது 50ஆவது வயதில் மன்னர் வேலூர் சிறையில் மரணமானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத போதைபொருள் தொடர்பில் சுங்க பிரிவிடம் ஜனாதிபதி கேள்வி ..!!!
Next post சிறுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு…!!