சிகா வைரஸ் குறித்த ஆலோசிக்க விரைவில் கூடுகின்றது உலக சுகாதர ஸ்தாபனம்…!!

Read Time:2 Minute, 37 Second

rttதென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் வேகமாக பரவி வரும் சிகா வைரஸ் குறித்து ஆலோசிக்க உலக சுகாதர ஸ்தாபனம் பிப்ரவரி 1 ஆம் திகதி அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகா என்ற வைரஸ் தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. சிகா வைரஸிற்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆய்வில் அமெரிக்கா,கனடா, தென்கொரியா போன்ற நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சிகா வைரஸ் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் உள்ள குரங்குகளிடம் இருப்பது முதன் முதலில் 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது. அதனால் இந்த வைரஸ்சிற்கு சிகா என்று பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஆபிரிக்கா,மற்றும் ஆசியாவில் மட்டுமே இந்த பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த ஆண்டு மே மாதம் சிகா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச் சலை பரப்பும் ஏடிஎஸ் நுளம்புகளே சிகா வைரஸையும் பரப்புகின்றன.

பிரேசிலில் மட்டும் இதுவரை 15 லட்சம் பேர் இந்த சிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25 நாடுகளில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிகா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பு வரும் 1 ஆம் திகதி ஜெனீவாவில் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிகா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்துகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து விரைவாக கண்டு பிடிக்குமாறு அதற்குறிய தீவிரநடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் கூறியிருப்பது நினைவுகூறத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் முன்னாள் ஊடக பிரதானி தன்னின சேர்க்கையாளரா?.. தயாமாஸ்டருக்கு நடந்தது என்ன…?
Next post 3 மாணவிகள் தற்கொலை:ஒருவர் சரண்…!!