இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி கிருஷ்ணராவ் மரணம்..!!

Read Time:1 Minute, 45 Second

4355இந்திய ராணுவத்தில் கடந்த 1981–ம் ஆண்டு முதல் 1983–ம் ஆண்டு வரை தளபதியாக இருந்தவர் கே.வி.கிருஷ்ணராவ். மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93.

கடந்த 1923–ல் விஜயவாடாவில் பிறந்த இவர், 1942–ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார். பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவர், 1972 முதல் 1974 வரை ராணுவத்தின் மேற்குப்பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட அவர், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரும் படைப்பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுடன் நடந்த போரில் தீரமுடன் பணியாற்றியதற்காக கிருஷ்ணராவுக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

1983–ல் ஓய்வு பெற்ற கிருஷ்ணராவ், காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களில் கவர்னராக பணியாற்றி உள்ளார். அவரது மரணத்தின் மூலம், பலமிக்க மிகப்பெரும் ராணுவ தலைவரை இந்திய ராணுவம் இழந்துவிட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
Next post கணவருடன் தகராறு; பெண் என்ஜினீயர் தற்கொலை…!!