எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்..!!

Read Time:2 Minute, 36 Second

oily-skin-500x500சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.

* 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டும்.

* 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.

* ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக அகலும்.
– இந்த இயற்கை வழிமுறைகளை தவறாமல் தினமும் செய்து வந்தால் உங்கள் சருமத்தினை பொலிவாக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும்..!!
Next post சீனாவில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி…!!