ஓர் ஆணின் லட்சணம் எதுவெல்லாம் என்று தெரியுமா? பெண்களே உசார்…!!

Read Time:6 Minute, 50 Second

timthumb (2)லட்சணமான பெண் வேண்டும் என்று சொல்லும் ஒரு ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா? இது சாமுத்திகா லட்சணத்தைக் கொண்டு தான் சொல்லப்படுகிறது. சாமுத்ரிகா லட்சணம் என்பது அங்கங்களைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதாகும்.

உதாரணமாக, ஒரு ஆணுக்கு மூக்கு கூர்மையாக இருந்தால், வாய் சிறியதாக இருந்தால் எப்பேற்பட்டவர்களாக இருப்பர் என்பதாகும். இங்கு ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.boby

நெற்றி, நெற்றி

நன்கு அகலமாகவும், உயர்ந்தும் இருந்தால், அவர்களிடம் அறிவும், செல்வமும் அதிகம் இருக்கும். சிறிய நெற்றியைக் கொண்டவர்கள் சற்று புத்தி மழுங்கியவர்களாக இருப்பர். அதுவே நெற்றியில் ரேகைகள் தெரிந்தால் அவர்களிடம் அதிர்ஷ்டம் அதிகம் உண்டு. ரேகைகள் இல்லாவிட்டால் ஆயுள் குறைவாக இருக்கும்.boby01
கண்கள் ஒரு
ஆணுக்கு கண்கள் அகலமாகவும், சிவப்பாகவும் இருந்தால், அவன் உலகையே ஆளும் திறன் கொண்டிருப்பான். அதுவே சிறிய கண்ணோ கொண்டிருந்தால், அவர்களிடம் அறிவும், ஆற்றலும் சற்று குறைவாக இருக்கும்.boby02

மூக்கு கூர்மையான

மூக்கைக் கொண்ட ஆண்கள் செல்வம், பதவி, புகழ் என்று இருப்பார்கள். சிறிய மூக்கைக் கொண்டவர்கள் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர். அதுவே மூக்கின் நுனிப்பகுதி பெரியதாக வீங்கி இருந்தால், அவர்கள் நல்லboby03

வாய்

ஒரு ஆணிண் வாய் சிறியதாக இருந்தால், அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக, புத்திசாலியானவர்களாக, புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். அதுவே வாய் பெரியதாக அகன்று இருந்தால், வெறும் வாய்ப்பேச்சு மட்டுமின்றி, எப்போதும் மற்றவரிடம் குற்றம் காண்பவர்களாக இருப்பார்கள்.

நாக்கு

நீளமான நாக்கைக் கொண்ட ஆண், நல்ல பேச்சாளராக இருப்பான். நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் சொல்வதெல்லாம் பலிக்கும். நாக்கு சிவப்பாக இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்.boby04

பல்

பற்கள் சிறியதாகவும், வரிசையாகவும் இருந்தால், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பர். கூர்மையான பற்களைக் கொண்டிருக்கும் ஆணுக்கு கோபம் அதிகம் வரும். ஒருவேளை பற்கள் வரிசையாக இல்லாமல் முன்னும், பின்னும் இருந்தால், தந்திரமானவர்களாக இருப்பர்.boby05

உதடு

உதடுகள் சிறியதாகவும், சிவப்பாகவும் இருந்தால் நல்ல அந்தஸ்து மற்றும் அதிகாரம் அவர்களிடம் நிலைத்து இருக்கும். ஒருவேளை உதடு கருமையாக, தடித்து இருந்தால் அவர்கள் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

கன்னங்கள்

கன்னங்களின் மேல் பகுதி உயர்ந்து இருந்தால், சுயநலமிக்கவர்களாக இருப்பர். சிரிக்கும் போது அல்லது பேசும் போது கன்னங்களில் குழி விழுந்தால், செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும் இருப்பர். ஒருவேளை கன்னங்கள் மிகவும் பரந்து, தசைப்பகுதி மிக்கவர்களாக இருந்தால், நல்ல ஆட்சியாளராகவும், செல்வந்தராகவும் இருப்பர்.boby06

தாடை

ஒரு ஆணின் தாடை நீளமாக இருந்தால், சிறந்த பேச்சாளராக இருப்பர். அதுவே தாடையில் முடி நன்கு அடர்த்தியாக வளர்ந்தால், அவர்கள் சற்று சுயநலமிக்கவர்களாக இருப்பர்.boby07

தோள்பட்டை

ஒரு ஆணுக்கு தோள்பட்டைகள் உயர்ந்து இருந்தால், அவரிடம் செல்வம் கொழிக்கும். சமமாக இருந்தால் அறிவானவர்களாக இருப்பர். அதுவே தாழ்ந்து இருந்தால் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாக இருப்பர். தோள்பட்டையில் ரோமங்களைக் கொண்டவர்களாக இருந்தால், நினைக்கும் எந்த காரியத்திலும் வெற்றி காண முடியாது.

மார்பு

*ஒரு ஆணுக்கு மார்பு பகுதி அகலமாகவும், நல்ல தசைப்பிடிப்போடும் இருந்தால், தான் இருக்கும் இடத்தில் நல்ல புகழ் பெற்றவனாக இருக்கும். மார்பு பகுதியில் ரோமம் இல்லாவிட்டால் நல்லதல்ல.

உயரம்

*ஒரு ஆண் உயரமாக இருந்தால், அது நல்ல ஆளுமைக்கான அடையாளம். ஒரு உயரமான ஆண் நல்ல உடல் பாகங்களுடன் இருந்தால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

விரல்கள்

*நீளமான விரல்களைக் கொண்ட ஆண்களுக்கு கலை ஆர்வம் அதிகம் இருக்கும். விரல்களுக்கு இடையே அதிகப்படியான இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கையின் நான்கு மூலைகளும் சம அளவு உயரத்தில் தட்டையாக இருந்தால் நல்ல பதவியில் இருப்பர். உள்ளங்கையில் குழி அதிகம் விழுந்தால் ஆயுள் காலம் மிகவும் குறைவு.

கைகள்

*முழங்கால் வரை நீளமான கைகளைக் கொண்ட ஆண்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் மற்றும் நல்ல கல்வியறிவைக் கொண்டவர்களாக இருப்பர். குட்டையான கைகளைக் கொண்ட ஆண்களை நம்பக்கூடாது. கைளில் நீளமான ரோமங்கள் கொண்டிருந்தல் அவர்களை செல்வம் தேடி வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோழி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது…!!
Next post திருமண நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்…!!