எப்போதும் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் தோன்றுவது ஏன்…?

Read Time:6 Minute, 6 Second

bath_idea_002.w540இன்று இருக்கும் பரபரப்பான உலகத்தில் நாம் அனைவரும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வருகின்றோம். இவ்வாறு இருக்கும் போது ஓய்வு எடுக்க கூட நேரம் கிடைக்காது. அப்படியே ஓய்வு கிடைத்தாலும் அதில் நாம் உறங்கி விடுகின்றோம். இதனால் நமது மூளையில் புதிய எண்ணங்கள் உருவாகுவது இல்லை.

சிறந்த ஐடியாக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் -மலை ஏறும்போது, வளர்ப்பு விலங்கிடம் விளையாடும்போதோ, உங்கள் உற்ற நண்பரிடம் பேசும்போதோ அல்லது தூங்குவதற்கோ எழுவதர்க்கோ சில நிமிடங்களுக்கு முன்போ தோன்றலாம்.

இவை எதற்காக மற்றும் ஏன் வருகின்றது என்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை நமக்கு கிடைக்கும் ஐடியாவை வரவேற்கவேண்டும். அண்மையில் கண்டறிந்த உண்மையென்னவென்றால் நாம் குளிக்கும்போது ஏன் சில நல்ல ஐடியாக்கள் தோன்றுகின்றது என்பதை பற்றி இப்பொழுது படிக்கலாம்.

* சிறியதோ பெரியதோ! நமது உடல் சுத்தம் ஆகும்போது சில ஆஹா நிமிடங்கள் நமக்கு தோன்றும். சில பெரிய ஐடியாக்களை யோசிப்பதற்கு குளியலறைதான் சிறந்த இடமாகும்.

*ஒரே மாதியான காரியங்களான குளிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது நமது ஆக்கத்திறன் கூடுதலாக வேலை செய்கின்றது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இந்த காரியங்களை நீங்கள் அன்றாடம் செய்துவருவதால் இவ்வகை காரியங்களை(புத்தகம் படிப்பதற்கு அல்லது எழுதும் காரியங்களை போன்று இல்லாமல்) செய்வதற்கு நீங்கள் உங்கள் மூளையை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

*உங்கள் மனதை நீங்கள் நினைத்தவாறு அலைபாயவிடுங்கள். இந்த பகல் கனவு அல்லது உங்கள் எண்ணங்களை அலைபாயவிடும் பொழுது- நமது முடிவுகள், இலக்குகள்,இயல்புகளை நிர்ணயம் செய்யும் மூளை தீர்மான மையமான முன்மூளை மேற்பகுதி வேலை செய்யாது.

*இது மூளையின் மற்ற பகுதிகளுக்கு வேலை கொடுத்து “டிபால்ட் மோடு நெட்வர்க்” (default mode network or DMN) நிலைக்கு கொண்டு செல்லும். இதன் மேற்பகுதி வேலை செய்யாததால் DMN செயல்பட்டு புதிய பல ஆக்கபூர்வமான எண்ணங்களை உருவாக்கச் செய்யும்.

*நாம் கடினமான வேளையில் ஈடுபட்டிருக்கும் போது – உதாரணமாக வேலையின் முக்கிய பகுயிதில் இருக்கும் போது, உங்கள் டிபால்ட் நெட்வர்க் செயல்படாமல் முன்மூளை மேற்பகுதி செயல்படத் துவங்கும். இதனால் பயப்படுவதற்கு தேவை இல்லை. ஏனெனில் இது ஒரு பொதுவான நிகழ்வு தான்.

*இதன் மூலம் நாம் ஒரு செயலில் நமது மனதை ஒருநிலைப்படுத்தி புதிதாக எழும் எண்ணங்களை தவிர்க்கச் செய்யும்.

*நீங்கள் குளிக்கும் போதும் அல்லது காலை ஓட்டத்தின் போதும் உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஹார்வார்ட்டில் இருக்கும் செல்லி கார்சன் அவர்கள் கண்டறிந்த உண்மையின் படி “அதிக ஆக்கபூர்வமானவர்கள் ஒரே எண்ணத்தை பகிர்வார்கள். குளிக்கும் போது நாம் எளிதில் திசைதிருப்பப் படுகின்றோம். நம்மை வேறு கோணத்தில் யோசிக்கச் செய்யும்.

*நமது மூளையை அலைபாயச்செயும். நமது DMN செயல்படுத்தி புதிய ஐடியாக்களை உருவாக்கும். அதனால், குளித்து முடித்த பின்பு பல நல்ல ஐடியாக்கள் உண்டாகும். உங்கள் வேலை அதிகமாக இருக்கும் போது சில மணித்துளிகள் இடைவேளை விட்டு ஒரு குளியல் செய்தால் அது உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து பல ஐடியாக்களை உண்டாக்கும்.

*குளிக்கும் போது உங்கள் உடல் சுத்தம் அடைந்து, உங்கள் உடலில் உள்ள டோபமைன் என்னும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் பல புதிய ஆக்கபூர்வமான ஐடியாக்களை உருவாக்குகின்றது. ஆல்பா அலைகள் நமது மூளைக்குள் நுழைந்து நமது ஒருநிலை தன்மையை ஆக்கிரமிக்கும்.

*நாம் தளர்வாக இருக்கும் போது (காலை அல்லது இரவு) குளிப்பதால், நமது எண்ணம் தெளிவாகவும் நன்றாகவும் செயல்படும் என “திங்கிங் அண்ட் ரீசனிங்” என்னும் இதழ் தெரிவிக்கின்றது. மேலும் அது நமது ஆக்கத்திறன் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றது.

*நாம் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் ஏன் உருவாகின்றது என்று இப்பொழுது தெரிந்து கொண்டோமல்லவா. ஆகவே இனிமேல் குளிக்கும் போது ஒரு பேனாவையும் பேப்பரையும் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அட பாவமே!! இப்படி ஒரு அவமானம் தேவையா??அதான் பிளான் பண்ணி பண்ணனும்…!!
Next post காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து….!!