உள்ளங்கை நிறத்தை வைத்தே உங்களின் குணதிசயங்களை சொல்லலாம்…!!

Read Time:8 Minute, 0 Second

WeepeDImhankd-615x322உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து சில தன்மைகளைப் பார்க்கலாம். ஒருவர் கறுப்பாகவோ, சிவப்பாகவோ இருக்கலாம். அவர்கள் உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது. உடலில் உள்ள பல்வேறு ரத்த நாளங்கள், தந்துகிகள் ஆகியவை உள்ளங்கையில் சிலந்தி வலை போல பின்னியுள்ளன.

ரத்தம் எல்லோருக்குமே சிவப்பு தான். அதை வைத்தே இந்தப் பிரிவு அமைகிறது. மேல்தோல் கறுப்பாக உள்ளவர்களின் உள்ளங்கையில் சிவப்பு என்பது சற்றுக் கருஞ்சிவப்பாக இருக்கலாம். அதை வைத்துப் பிரிவுகளை நிர்ணயிக்க வேண்டும்.

ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை:

இந்த நிறம் கொண்டவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்கள். கடுமையான சுபாவம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்வார்கள். அகம்பாவிகள்.

சிவப்பு நிற உள்ளங்கை:

குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை உடையவர்கள், கோபதாபங்கள் கொண்டவராக இருப்பார். ஆனால், பற்றும் பாசமும் உடையவர்கள். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், அவசரக்காரர்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள்.
இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை:

ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். நம்பத்தகுந்தவர்கள்.

மஞ்சள் நிற உள்ளங்கை:

இவர்கள், ஆரோக்கியக் குறைவு, பயம், பீதி உள்ளவர்கள். மனோபலம் இல்லாதவர்கள். பலவீனமானவர்கள். அறிவாற்றல் குறைந்தவர்கள். சோம்பேறிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள். எவரையும் நம்பாதவர்கள், தோல்வியும் துயரமும் வாழ்க்கையில் கொண்டவர்கள்.
அடுத்து, விரல்கள், நகங்களின் அமைப்பை வைத்து, கையை பாகுபடுத்தும் விபரங்களைக் காண்போம்.

கைகளில் விரல்களின் அமைப்பும், நகங்களின் அமைப்பும்கூட ஒருவருடைய குணாதிசயங்களைத் தெரிவித்துவிடும் என்கிறது பஞ்சாங்குலி சாஸ்திரம். நகத்தை நீளமாக வளர்த்தாலும் சரி, குட்டையாக வெட்டிக் கொண்டாலும் சரி, நகங்கள் அமைவதற்காக விரல்களின் மேல் அமைந்துள்ள பகுதியின் வடிவத்தைப் பொறுத்தே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.

ஒருவரது கைகளைப் பரிசீலிக்கும் போது நகங்களையும், நகக் கண்களையும் கூடச் சோதிக்க வேண்டும்.

மனித உடலில் உற்பத்தி யாகும் காந்த சக்தியானது நகக்கண்கள் மூலமே வெளிப்படுகின்றன. வெளியில் உள்ள காந்த சக்தியும் நகக் கண்கள் மூலமே ஈர்க்கப்படுகின்றன. இந்த சக்தியைப் பாதுகாக்கும் மூடியாக, நகங்கள் உதவுகின்றன.

சிலர் மனக்கலக்கமாக இருக்கும்போதும், சந்திக்கும் போதும் நகத்தைக் கடிப்பதற்குக் காரணம், அந்த காந்த சக்தியை நெருடி, பலத்தை பெருக்குவதற்குத்தான். அல்லது, தன்னை சமாதானப்படுத்திக் கொள்வதற்குத்தான்.

மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் முதலானவற்றில் கையிலுள்ள நகக்கண்கள் மூலமும், விரல் நுனி மூலமும், காந்த அலைகளைச் செலுத்தித்தான் ஒருவரை ஹிப்னாடிஸ நிலைக்குக் கொண்டு வருகிறார்கள்.

மேலும், நகங்கள் நல்ல மின்கடத்திகள், சூழ்நிலையில் உள்ள மின்சக்திகளை உடலில் கடத்தி, உடலின் சக்தியை சமநிலைப்படுத்துவது நகமும், நகக்கண்களும், விரல் நுனிகளுமேயாகும்.
நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அழகாக வைத்துக் கொள்வதும், நகக் கண்களில் அழுக்கு படியாமல் வைத்திருப்பதும் நல்ல ஆரோக்கியமான அறிகுறி.

நகங்களில் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது, வாழ்க்கையில் ஏற்படும் திடீர் முன்னேற்றங்களைக் கெடுக்கும். பல்வேறு விதமான நக அமைப்புகள் நகக்கண்கள் என்று சொல்லப்படும் இவற்றின் வடிவமைப்பையும் அதற்கேற்ற தன்மையையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.

மிகச் சிறியது: குறுகிய மனப்பான்மை, சுயநலம் கொண்டவர்கள். மிகக் குறுகிய, வெளிறிய தன்மை: சந்தர்ப்பவாதிகள். காரியவாதிகள். நம்ப முடியாதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். பிறரை நம்பாதவர்கள்.

சிறிய, செவ்வக வடிவம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள். பயந்த சுபாவக்காரர்கள்.
சிறிய மிக அகலமான வடிவம்: பிடிவாதக் காரர்கள். சண்டையிடுகிற குணம் உண்டு்.

கடினமான, அகலக் குறைவான வடிவம்: நினைத்ததைச் சாதிப்பவர்கள். நன்மை தீமை என பகுத்தறியாதவர்கள்.

சதுரமான வடிவம்: கோழைகள். பயந்த சுபாவம் கொண்டவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
சிறிய முக்கோண வடிவம்: மேலே அகலமாகவும், கீழ்ப்பாகம் குவிந்தும் அமைந்த முக்கோண வடிவம் இது.

தனித் தன்மை கொண்டவர்கள். தனிமை விரும்பிகள். கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருக்கும்! நீளத்தைவிட அகலம் அதிகமான வடிவம்: கோபப்படக் கூடியவர்கள். உணர்ச்சிவசப்படுவார்கள்.

முனையில் அர்த்த சந்திர வடிவில் வளைந்த வட்டம்: ஸ்திர புத்தி மிக்கவர்கள். விரைவில் முடிவெடுக்கும் தன்மை கொண்டவர்கள்.

விரலை விட சிறியதான நீண்ட வடிவம்: தானாகச் சிந்திக்கும் திறனில்லாதவர்கள். பிறரை நம்பியே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.

நீளமான, மேலே கூராக உள்ள வடிவம்: அழகிலும் வசதியிலும் ஈடுபாடு உடையவர்கள். சிற்றின்பப் பிரியர்கள்.

அகலத்தைவிட நீளம் அதிகமாக இருந்து கீழே வளைந்து மேலேயும் வளைந்த முட்டை வடிவம் : பூரணமான மனிதர்கள். எதிலும் நிறைவு காண்பவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொறுமையாக இருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த ஷாக்….!!
Next post சிரிய அகதிகளை போர்ப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் துருக்கி: பொது மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்…!!