தமிழகத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சிக்காக குழந்தைகள் கடத்தல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்…!!

Read Time:2 Minute, 19 Second

a3f59719-bd53-490e-82fb-cf14a7bdc7d7_S_secvpfதமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் கலைச்செல்வி சென்னை போலீஸ் கமிஷனர் அலவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகாரித்து வருகிறது. புதிதாக தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளை ஆராய்ச்சி செய்யும் மருத்துவ ஆய்வு கூடங்கள் தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இங்கு எலி, பூனை போன்ற விலங்குகளுக்கு மருந்து கொடுத்து பரிசோதனை செய்வது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக மனிதர்களுக்கு மருந்து செலுத்தி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஏழை இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பண ஆசைகாட்டி அதற்காக அழைத்தும் செல்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் போது அவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மரணம் அடையும் நிலையும் உள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக ரகசியமாக நடைபெறும் இது போன்ற ஆராயச்சிக்காக தற்போது குழந்தைகளும் கடத்தப்படுகிறார்ளோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அதுபோன்ற மருத்துவ ஆராய்ச்சி கூடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன் வால்டாக்ஸ் ரோடு மற்றும் ஐகோர்ட்டு அருகே சாலையோரத்தில் தூங்கிய 2 குழந்தைகள் கடத்தப்பட்டன. குழந்தைகளை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிமுனையில் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கிய மர்ம வாலிபர்கள்…!!
Next post விருகம்பாக்கத்தில் 10–ம் வகுப்பு மாணவி மற்றும் தாய் தற்கொலை…!!