பாரிமுனையில் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கிய மர்ம வாலிபர்கள்…!!
பாரிமுனை பழைய திருவள்ளுவர் பஸ்நிலையம் அருகே நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிய 6 மாத குழந்தை ரோகேஷ் கடந்த 20–ந்தேதி மர்மகும்பலால் கடத்தப்பட்டது.
இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் மர்ம வாலிபர்கள் 2 பேர் அவ்வழியே நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதேபோல் கடந்த மாதம் வால்டாக்ஸ் சாலையோரத்தில் பெறறோருடன் தூங்கிய 8 மாத குழந்தை சரண்யாவும் கடத்தப்பட்டது.
அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் 3 மர்ம கார்கள் அவ்வழியே செல்வது பதிவாகி உள்ளன. அதில் இருந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த 2 குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Average Rating