பாரிமுனையில் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது…!!
Read Time:1 Minute, 24 Second
தாம்பரம் மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் பிரவீண் குமார் (வயது 20). இவர் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாகவும், பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் விளம்பரம் செய்தார்.
வேலூரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் செல்போன் வேண்டும் என்றும், நெய்வேலியை சேர்ந்த பிரசன்னா என்பவர் வேலை வேண்டும் என்றும் பிரவீண்குமாரிடம் அணுகினார்கள்.
இருவரையும் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலைக்கு வரவழைத்தார். அங்கு ரஞ்சித்குமாரிடம் ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டு இங்கேயே நில்லுங்கள். செல்போன் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் திரும்ப வில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ் வழக்குப் பதிவு செய்து பிரவீண் குமாரை கைது செய்தார்.
Average Rating