லண்டன் சாலைகளை ஜொலிக்க வைக்கும் சவுதி கோடீஸ்வரரின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆடம்பர கார்களின் அணிவகுப்பு..!!

Read Time:2 Minute, 0 Second

201604010856200219_gold-plated-cars-of-saudi-prince-Turki-Bin-Abdullah-glitter_SECVPFலண்டன் நகர சாலைகளில் வலம்வரும் சவூதி கோடீஸ்வரரின் தங்க முலாம் பூசப்பட்ட பிரம்மாண்ட கார்களின் அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா(44). மிகப்பெரும் கோடீசுவரரான இவர், இரும்புக்கு பதிலாக தங்கத் தகடுகளால் தயாரிக்கப்பட்ட சூப்பர் கார்களில் லண்டன் நகர வீதிகளில் வலம் வருகிறார்.

தனது ஆடம்பரக் கார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லம்பாகினி, ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்களில் தங்கத் தகடுகளை பொருத்தி வலம்வரும் இளவரசர் துர்கி பின் அப்துல்லா பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.

இளவரசர் துர்கி பின் அப்துல்லாவின் சமூக வலைத்தள புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ஆடம்பர வாழ்க்கையை பறைசாற்றுகின்றன. ஒரு புகைப்படத்தில் பாலைவன ஓட்டகம் ஒன்றை அவர் தனது விலைமதிப்பு மிக்க மெர்சிடஸ் ஜி63 ல் துரத்துகிறார். மற்றொரு புகைப்படத்தில் மெர்சிடஸ் ஜீப்பின் டிரைவர் இருக்ககையில் சிறுத்தை ஒன்று நிற்கிறது.

தெற்கு லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் பலகோடி பவுண்டுகள் மதிப்பிலான தங்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த கார்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள லண்டன் நகர இளைஞர்களும், இளம்பெண்களும் அதிக ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு எலியை கொன்றால் தலா ரூ.25 பரிசு: பாகிஸ்தானின் பெஷாவரில் அதிரடி அறிவிப்பு…!!
Next post மயிலாடுதுறை அருகே மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது..!!