ஒரு எலியை கொன்றால் தலா ரூ.25 பரிசு: பாகிஸ்தானின் பெஷாவரில் அதிரடி அறிவிப்பு…!!
Read Time:1 Minute, 15 Second
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியை கொல்பவர்களுக்கு தலா ரூ.25 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எலிகளை கட்டுப்படுத்த அந்த அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறிப்பாக எலி கடித்து இளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெஷாவர் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவை அமைப்பு சார்பில் கொல்லப்பட்ட எலிகளை சேகரிக்கும் மற்றும் உரிய நபர்களுக்கு ரொக்கத்தை வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதிக எலிகள் புழக்கத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் பெஷாவர் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Average Rating