மக்கள் மீளத்திரும்ப அனுமதிக்கப்படுவதை மாத்திரம் மீள்குடியேற்றம் என அர்த்தப்படுத்த இயலாது! -நிருபா குணசேகரலிங்கம்..!!

Read Time:16 Minute, 36 Second

timthumb (1)உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­துள்ள 12,681 குடும்­பங்­களைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் வரை­யா­னோரே தற்­போது மீளக்­கு­டி­யேற்றப்­ படவேண்­டி­யுள்­ள­தாக அர­சாங்கத்தகவல்கள் தெரி­விக்­கின்­றன.

போரின் பின் ஒரு சராசரி இயல்பு நிலைக்கு மக்கள் வரவேண்­டு­மா யின், மக்கள் தமது சொந்தக் கிரா­மங்­க­ளுக்கு உரி­மை­க­ளுடன் சென்றே ஆக­வேண்டும். ஆகவே, இவர்­க­ளது மீள்­கு­டி­யேற்றம் தாம­த­மின்றி நடை­பெ­ற­வேண்டும்.

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்களா­கவும் வெளி­நா­டு­களில் அகதி நிலையிலும் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­களில் வெளி­நா­டு­களில், குறிப்­பாக மேற்­கு­லக நாடு­களில் தஞ்­ச­ம­டைந்­த­வர்கள் அந்­நா­டு­க­ளிலேயே தற்­போதும் வாழ விரும்­பு­கின்­றனர்.

எனினும், இந்­தி­யாவில் தஞ்­ச­ம­டைந்­த­வர்கள் உரிய வச­தி­வாய்ப்­புக்கள் ஏற்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் மீளவும் தாயகம் திரும்ப விரும்­பு­கின்­றனர். காரணம், மேற்­கு­லகில் தஞ்சக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெறும் சலு­கைகள்இ உரி­மைகள் போல் இந்­தி­யாவில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­வர்­க­ளுக்குக் கிடை­யாது. இவ்­வா­றாக ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் நாட்டின் வெளி­யேயும் அக­தி­க­ளா­க­வுள்­ளனர்.

”மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள் ” என ஒரு ­ப­கு­தி­யினர் காத்­தி­ருக்க, மீள்­கு­டி­யேற்­றப்­பட்­ட­வர்­களின் நலன்கள் தொடர்­பிலும் நீண்­டதோர் அவ­தானம் தற்­போதும் தேவை­யா­க­வுள்­ளது. இந்த நிலையில் கடந்த காலங்­களில் நடை­பெற்ற மீள்­கு­டி­யேற்­றங்கள் தொடர்பில் அதிக விமர்­ச­னங்கள் உள்­ளன. அவ் விமர்­ச­னங்­க­ளுக்கு இன்­றைய அர­சாங்கம் பொறுப்­பு­டை­யது அல்ல; எனினும் நடை­மு­றையில் உள்ள அர­சாங்கம்இ கடந்த அர­சாங்­கத்தின் மீள்­கு­டி­யேற்­றத்தில் உள்ள அவ­லங்­களைத் தீர்ப்­பது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய பொறுப்பில் உள்­ளது.

காரணம். போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பலர் அவர்­க­ளது சொந்த கிரா­மங்­க­ளுக் குத்திரும்­பி­ய­போதும் மிகவும் பாதிக்­கப்­பட்ட வாழ்க்­கை­யி­னையே வாழ்ந்து வரு­கின்­றனர். இதனை வன்­னியின் உட்­கி­ரா­மங்­க­ளுக்குச் செல்வோர் கண்டு கொள்ள முடியும். இதற்கு மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சினை­க­ளுக்கு மீள்­கு­டி­யேற்­றத்தில் சரி­யான கொள்­கைகள் பின்­பற்­றப்­ப­டா­மையே அடிப்­ப­டை­யாகும். அடுத்துஇ சக­ல­தையும் இழந்த மக்­க­ளுக்கு உரிய நிவா­ர­ணங்கள் மற்றும் நிவர்த்­திப்­புக்கள் வழங்­கப்­ப­டாமல் வி­டப்பட்­ட­தும் ஒரு கார­ண­மாகும்.

எனினும்இ கடந்­த­கா­லத்தில் மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­ட­வர்­களின் அவ­லங்கள் பற்றி அதிகம் பேசப்­ப­ட­வில்லை. மாறாக மீளக்­கு­டி­ய­ம­ரா­தோரை மீளக்­கு­டி­யேற்­றுதல் என்ற விட­யமே அதிக கரி­ச­னைக்­கு­ரி­ய­தாகப் பேசப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் தான் 12 ஆயி­ரத்து 681 குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 44 ஆயிரம் வரை­யி­லான மக்கள் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இறுதி யுத்த காலப்­ப­கு­தியில் நாடு அது­கா­ல­வ­ரையில் சந்­தித்­தி­ராத இடம்­பெ­யர்ந்தோர் பிரச்­சி­னை­யினை எதிர்­கொண்­டது. அதா­வது, அர­சாங்கம் வெறும் ஒரு இலட்­சத்­திற்கு உட்­பட்­ட­வர்­களே வன்­னியில் உள்­ளனர் என்று உள்­நோக்­கத்­துடன் மதிப்­பீடு செய்­தது. எனினும் கண்­கூ­டா­கவே இலட்சக் கணக்­கா­ன­வர்கள் வவு­னியா செட்­டிக்­குளம் பிர­தே­சத்தில் இடம்­பெ­யர்ந்தோர் முகாம்­களை வந்­த­டைந்­தனர். முகாம்­க­ளை­ய­டைந்த இடம்­பெ­யர்ந்­த­வர்கள் சிறைக்­கை­திகள் போல தான் நடத்­தப்­பட்­டனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதற்­காக ஒட்­டு­மொத்த இலங்­கையே வெட்­க­ம­டைய வேண்டும்.

இந்த இடத்தில் இடம்­பெ­யர்ந்­தோரை சிறைக்­கை­திகள் போன்று வைத்­தி­ருக்க முடியாது என்ற சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்கள் மற்றும் மக்­களை இலட்­சக்­க­ணக்கில் முகாம்களில் வைத்­­தி­ருக்க முடி­யாது என்ற நெரு க்­கடி ஏற்­பட்­டதும் அர­சாங்­கத்­தினால் ஆரம் பிக்­கப்­பட்ட செயன்­மு­றை­யா­கவே மீள்­குடி ­யேற்றம் அமைந்­தது. ஆட்­சியில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் மிகுந்த பாது­காப்­புக்­கெ­டு­பி­டி­க­ளுடன் மக்­களை சில சில கிரா­மங்­க­ளுக்குச் செல்ல அனு­ம­தித்­தது.
இவ்­வா­றா­கவே மீள்­கு­டி­யேற்றம் என்ற பெயரில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் தமது சொந்த இடங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர். உண்­மையில் அங்கு மீள்­கு­டி­யேற்றம் என்ற சொல்லை அர­சாங்கம்; உப­யோ­கித்­தாலும் அது மீள்­கு­டி­யேற்­ற­மல்ல.

மீளத்­தி­ரும்­பு­தலே நடை­பெற்­றது. அடிப்­ப­டையில்இ சொத்­துக்கள் உடை­மைகள் மற்றும் உயிர்கள் என சக­ல­தையும் இழந்த மக்கள் அவர்­க­ளது கிரா­மங்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­க­ளின்றி அனுப்­பி­வைக்­கப்­பட்ட அவ­ல­மே­யாகும்.

பத்துத் தக­ரங்­களும் ஐந்து சீமெந்துப் பைக­ளுமே மீள்­கு­டி­யேற்றம் எனக் கொண்டு சென்று இறக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இதே­வேளைஇ சில­ருக்கு மீள்­கு­டி ­யேற்றக் கொடுப்­ப­ன­வாக 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்­கப்­பட்­டது. இவற்­றுக்கு மேலாக சில­ருக்கு காலப்­போக்கில் இந்­திய அர­சாங்­கத்தின் வீட்­டுத்­திட்­டமும் கிடைக்­கப்­பெற்­றது. இந்த இடத்தில் தான் மீளக்­கு­டி­ யேற்­றத்தில் என்ன நடை­பெற்­றது என்­பது கேள்­வி­யா­க­வுள்­ளது?

இது­கா­ல­வ­ரையில் ஒரு இலட்­சத்து 58 ஆயி­ரத்து 181 வரை­யான குடும்­பங்­களைச் சேர்ந்த 5 இலட்­சத்து 24 ஆயி­ரத்து 944 பேர் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. இத் தொகைக்குள் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 31 ஆயி­ரத்து 845 குடும்­பங்கள்இ மன்­னாரில் 26 ஆயி­ரத்து 390 குடும்­பங்கள்இ கிளி­நொச்­சியில் 41 ஆயி­ரத்து 862 குடும்­பங்கள்இ முல்­லைத்­தீவில் 41 ஆயி­ரத்து 322 குடும்­பங்கள் என மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். இம் மீள்­கு­டி­யேற்ற தொகை ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மாத்­திரம் இடம்­பெற்­றது அல்ல.

கடந்த அர­சாங்­கத்தின் ஆட் சிக் காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற மீள்­கு­டி­யேற்­றங்­க­ளை யும் உள்­ள­டக்­கிய தொகை­யே­யாகும். எது எப்­ப­டி­யி­ருந்­த­போதும் மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளது வாழ்­வா­தாரம் மறு ­சீ­ர­மைக்­கப்­ப­ட­ வில்லை என்ற நிலையில் மாற்றுத் திட்­ட ங்­களை இன்றும் முன்­வைக்­க­வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

அதே­வேளைஇ சாதார­ண­மாக மீளத்­தி­ரும்­பிய மக்கள் என்ன என்ன நிவா­ர­ணங்­க­ளுக்கு உரி­ய­வர்கள் என்­பதை பொது அறி­வித்தல் வாயி­லாக வெளி­யிட்டு பெற­வேண்­டிய உத­வி­களைப் பெறா­த­வர்­க­ளுக்கு தற்­போ­தைய நிலையில் நிவா­ர­ணங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். இந் நிவா­ரண விட­யத்­திற்குள் தொழில் நிலை­மை­க­ளுக்­கான சூழல் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது கட்­டா­ய­மாகும்.

போரினால் அழி­வ­டைந்த அரச கட்­ட­டங் கள் போரின் பின் சீக்­கி­ர­மாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டன.அதற்கு அடுத்த படி­யாக பொரு­ளா­தார உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளான வீதி அபி­வி­ருத்திஇ மின்­சார விநி­யோகம் போன்­றன நடை­பெற்­றுள்­ளன. இவ்­வா­றாக நடை­பெற்ற அபி­வி­ருத்­திகள் நேர­டி­யாக போரினால் பாதி க்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நேர­டி­யான மீள்­விப்­பினைக் கொடுக்­க­வில்லை.

நடை­பெற்ற மீள்­கு­டி­யேற்­றங்­களில் பல சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்­கா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டன. மக்­களை முகாம்­களில் இருந்து வெளி­யேற்­றி­விட்டால் மீள்­கு­டி­யேற்றம் பூர்த்தி என்று கூறி­வி­டலாம் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே மேற்­கொள்­ளப்­பட்­டது.

உதா­ர­ண­மாக, கடந்த 2012ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் ஜெனீவா மாநாட்­டினை சமா­ளிப்­ப­தற்­காக வவு­னியா இடைத்­தங்கல் முகாம்கள் மூடப்­பட்­டன. இடைத்­தங்கல் முகாமில் இருந்த மக்கள் இர­வோடு இர­வாக வேறு இடங்­க­ளுக்குக் கொண்டு சேர்க்­கப்­பட்­டனர். இவ்­வா ­றாகஇ முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் வலை­ஞர்­ம­டப்­ப­கு­தியில் நிரந்­த­ர­மாக குடி­யி­ருந்த கடல்­தொழில் செய்யும் குடும்­பங்­களை கடல் வளமே அற்ற புதுக்­கு­டி­யி­ருப்­பிற்கு அப்­பா­லுள்ள திம்­பிலி என்ற கிரா­மத்தில் அன்­றைய அர­சாங்கம் மீளக்­கு­டி­யேற்­றி­யது.

இவ்­வாறு அடிப்­ப­டைகள் ஏது­வு­மற்று குடி­யேற்­றப்­பட்ட மக்கள் பின்னர் வாழ்­வா­தா­ரத்­திற்கே வழி­யின்றி அலை­ய­வேண்டி நேர்ந்­தது. இது அர­சாங்கம் இதய சுத்­தி­யுடன் சர்­வ­தேச விட­யங்­களை அணு­காது அழுத்­தங்­களைச் சமா­ளிப்­ப­தற்­காக மக்­களை பக­டைக்­கா­யாக்­கி­யது என்­ப­தையே காட்­டு­கின்­றது.

மீள்­கு­டி­யேற்­றத்தின் உண்­மை­யினை வெளியு­லகம் அறி­வதை கடந்த அர­சாங்கம் விரும்­ப­வில்லை. எல்­லா­வற்­றி­னையும் மூடு­மந்­தி­ர­மாக வெளி­யு­கிற்கு எல்லாம் சரி­யாக நடந்­து­விட்­டது என்ற காட்­சிப்­ப­டுத்­த­லையே அது மேற்­கொண்­டது. யாழ்ப்­பாண மாவட்­டத்தில் இன்று இடம்­பெ­யர்ந்­த­வர்கள் முகாம்­க­ளிலும் உற­வினர் வீடு­க­ளிலும் உள்­ளனர் என இன்­றைய அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

ஆனால் 2013 காலப்­ப­கு­தியில் யாழ்ப்­பாண மாவட்ட அரச அதி­ப­ராக இருந்த சுந்­தரம் அரு­மை­நா­யகம் யாழ். மாவட்­டத்தில் மீளக்­கு­டி­ய­மர வேண்­டியோர் பற்­றிய விபரம் தம்­மிடம் கிடை­யாது என்று ஒரு தடவை சொல்­லி­யி­ருந்தார். அக்கருத்து அப்­போது அர­சுக்கு வெளியில் நின்­ற­வர்­களின் கடும் எதிர்ப்­பிற்­கு­ரி­ய­தாக அமைந்­தது. அர­சியல் அழுத்­தங்­க­ளுக்­காக அரச நிர்­வா­கமும் மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­யான மீள்­கு­டி­யேற்றம் பற்­றிய இடர்­களை மூடி­ம­றைப்புச் செய்தே வந்­தது.

தமிழ் மக்­களின் அவ­லங்­களுள் ஒன்­றான மீள்­கு­டி­யேற்றம் அர­சியல் அழுத்­தங்­களால் பல்­வே­று­பட்ட மூடு­மந்­தி­ரங்கள் கூறப்­பட்டு மறைக்­கப்­ப­டு­வ­தொன்­றா­கவே இருந்து வந்­துள்­ளது. எனவே, கடந்த காலத்தில் மேற்­கொ ள்­ளப்­பட்ட மீள்­கு­டி­யேற்­றங்கள் பல­வற்றை அடிப்­ப­டையில் மீள்­கு­டி­யேற்றம் எனக் கூற முடி­யாது. அதற்கு இன்­றைய அர­சாங்­கத் தினை நாம் குற்­றஞ்­சாட்ட முடி­யாது என்­ப­துவும் உண்மை.

எனவே இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில், இன்­றைய அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தலை­மை­யி­லான மீள்­கு­டி­யேற்ற அமைச்சு மக்­களின் கடந்­த­கால மீள்­கு­டி­யேற்­றத்தின் உண்­மைத்­துவம் பற்றி பரந்த ஆய்வு ஒன்றை ஆரம்­பிக்க வேண்டும். அதன்­வ­ழி­யாக போர் முடி­வ­டைந்து 7 ஆண்­டுகள் ஆகின்ற நிலை­யிலும் வாழ்­வா­தா­ரத்­தினை இழந்­துள்ள மக்­களின் நிலை கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­ வேண்டும்.

அத்­துடன் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கா கக் காத்­தி­ருக்­கின்ற மக்­களின் அவ­லங்­க ளும் சொல்லில் அடங்­கா­த­வை­யா­க­வுள்ளன. இந்­நி­லையில் மீள்­கு­டி­யேற்றம் பூர்த்­தி­ய­டை யும் வரையில் மீளக்­கு­டி­ய­ம­ராது இருக்­கின்ற மக்­க­ளுக்கு தொடர் நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வேண்டும். நிவா­ரணம் பெறு­வது பாதிக்­கப்­பட்ட மக்­களின் உரி­மை­யாகும்.

மீள்­கு­டி­யேற்றம் சர்­வ­தேச வரை­ய­றை­க ளைக் கொண்­ட­தா­கவும் திட்­ட­மி­டப்­பட்­ட­தா ­கவும் அமைந்­தி­ருந்தால் வடக்­கிலும் கிழக்­ கிலும் கணி­ச­மான மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­களைத் தவிர்த்­தி­ருக்­கலாம். மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு என நிய­மங்கள் உள்­ளன. அக­திகள் மற்றும் இடம்­பெ­யர்ந்தோர் வீட்டு மற்றும் ஆதனமீளளிப்புத் தொடர்பான ஐக்கி யநாடுகள் சபையின் கோட்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் அதிக அவதானம் செலுத் தப்படவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)
Next post இவரு முட்டையை உடைக்கும் வித்தையை பாருங்க!! அசந்து போய்டுவிங்க…!!