பாடசாலைக்கு சென்ற மாணவி இரண்டு மாதங்களின் பின் கணவனுடன் திரும்பினார்..!!
காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர்.
இச்சம்பவம் ஊவா – பரணகமையில் 05.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
இம் முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்த வேளையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவி, தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவ் இருவரும் இள வயதுகளை உடையவர்களென்பதும், அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரியவந்துள்ளது.
Average Rating