பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு…!!

Read Time:1 Minute, 47 Second

millwood_school_002கனடாவில் பிரபல பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
கனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு இளைஞர்களையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் கைதான இருவரும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தானா என்பது குறித்து உறுதி செய்த பின்னர் நடவடிக்கையின் போக்கு மாறுபடும் என கூறப்படுகிறது.

பள்ளி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அங்குள்ள மாணவர்களும் பெற்றோரும் ஏற்கனவே கருதலுடன் இருந்ததாகவும், அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.

ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்தில் சிலர் நுழைந்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறும் பொலிசார்,

பள்ளி மீது அச்சுறுத்தலுக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானத்தில் சிறந்தது கல்விதானம்: வியக்க வைக்கும் பாகிஸ்தான் ஆசிரியர் (வீடியோ இணைப்பு)
Next post நடுரோட்டில் நபரை உயிருடன் தீயிட்டு கொளுத்திய மக்கள்..!!