25 வயதில் குழந்தையை போல் இருக்கும் பெண்: விநோத நோயால் பாதிக்கப்பட்ட அவலம்…!!
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் விநோத நோய் காரணமாக எலும்பெல்லாம் சுருங்கி குழந்தையை போல் உள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமரி குந்தி.
பிறக்கும்போது அனைவரையும் போல் இயல்பாக பிறந்த இவருக்கு 9வது வயதில் இடது காலில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவரிடன் சிகிச்சைக்காக சென்றுள்ளார். எனினும் அவரது கால்கள் தொடர்ந்து பலவீனமடைய தொடங்கியது.
அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் நிலை சீரடையவில்லை.
இந்நிலையில் தற்போது அவரது கால் எலும்புகள் மட்டுமின்றி உடலில் உள்ள பெரும்பாலான எலும்புகள் சுருங்கியுள்ளன.
இதன் காரணமாக 4 அடி உயரம் இருந்த அவர் தற்போது 2 அடி உயரத்துக்கு சுருங்கிப்போனார்.
இதனால் நடக்க முடியாமல் தவித்த அவர் படுத்த படுக்கையாகவே மாறிப்போனார்.
அவரது நிலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், குமாரி விநோத எலும்பு அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Osteogenesis imperfecta என அழைக்கப்படும் இந்த நோய் காரணமாக அவரது எலும்புகள் சுருங்கியுள்ளன.
இதனை முழுதும் குணப்படுத்த முடியாது என்றாலும் அவரது வலியை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது தாயார் தேவி கூறியதாவது, பிறக்கும் போது அவர் இயல்பாகவே இருந்தார்.
எனினும் கடந்த 8 ஆண்டுகளாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது நிலை இப்படியாகியுள்ளது.
இரண்டு வேலை உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் குமாரிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
எனினும் தற்போது அவளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக ஊர்க்காரர்கள் அவர்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் விரைவில் தனது நிலை சரியாகும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார் குமாரி.
Average Rating