அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

Read Time:7 Minute, 26 Second

womanneckbraceகாமம் .,மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க என் கைவசம் உள்ள ஐடியாவை தருகிறேன். நீங்கள் இதை எல்லாம் முயற்சி செய்து பார்த்து ரிசல்ட்டை எனக்கு அனுப்பிவைக்கவும் .( அதன் பின் தான் நான் என் வீட்டில் முயற்சி செய்யவேண்டும்)

நாம் செய்யும் சில சின்ன சின்ன செயல்கள் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுகச் செய்வதோடு அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும் உணர்த்த செய்யும். ( இதனால் நமக்கு விளையும் பயன்? நாம் அதிக நேரம் லேப் டாப்பில் உட்கார்ந்தால் வசை கிடைப்பதற்கு பதிலாக நல்ல உபசரிப்பு கிடைக்கும், நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிங்க்ஸ் அடிக்கும் போது சுட சுட நல்ல சைடிஸ் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் மக்கா.. சொல்லுரத சொல்லிட்டேன்)

ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாருங்கள்.அது அவர்களுக்கு அந்த நாளை சிறப்பாக தொடங்குவதற்க்கு ஒரு சிறிய டோக்கன் கொடுத்தது போல இருக்கும்.

அது தன் கணவர் தன்னை உணர்வுபூர்வமாக நேசிப்பதை உணர்த்தும்.( மக்கா நீங்க சொல்ல வருவது எனக்கு புரிகிறது அந்த மூஞ்சிய காலையில் மேக்கப் இல்லாமல் பார்த்து பயம் இல்லாமல் எப்படி புன்னகை செய்வது என்று நீங்கள் கேட்கவருவதும் எனக்கு நல்லா தெரியும் அதற்கும் என்னிடம் ஐடியா உள்ளது.

காலையில் கண்ணை முடிக்கொண்டே கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விடுங்கள். நமக்கும் பயம் வராது &அவர்களும் நினைப்பார்கள் நாம் மிகவும் காதல் உணர்வுடன் அவர்களை நினைத்து முத்தம் கொடுப்பதாக) ((எப்படி நம்ம ஐடியா?? என்ன அவார்டு தர நினைக்கிறீகளா.

இந்த ஆன் லைன் அவார்டு எல்லாம் எனக்கு வேணாம். நான் ஒன்னும் ஏமாளி அல்ல சும்மா ஒரு பிக்சர் அனுப்பி அதில் உங்கள் பெயரையும் போட்டு & உங்கள் ப்ளாக்கிற்கு ஒரு லிங்கும் அதில் வைத்து என் ப்ளாக்கில் இலவசமாக அதை போடுவதெல்லாம் வேண்டாம். ) வேணுமென்றால் ஒரு தங்க பிஸ்கட் வாங்கி அதில் உங்கள் பெயரை போட்டு அனுப்பி வைத்தால் வாங்கி கொள்கிறன்))
அது போல முடிந்தால் வார இறுதியில் அவர்களுக்கு முன்பாக எழுந்திருந்து காலை டிபன் பண்ணி அவர்களூக்கு கொடுத்து உதவுங்கள்.

வாரம் முழுவதும் அவர்கள் அதிகாலையில் எழுந்திருந்து நமக்காக கஷ்டப்படுவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர்களூக்கு நல்ல சந்தோசத்தை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை நாம் சிறப்பாக நடத்துவதையும் உணர்வார்கள் ( இல்லையேன்றால் அவர்கள் டெய்லி செய்யும் இட்லி தோசை உப்புமாதான் நமக்கு மீண்டும் கிடைக்கும் நமக்கு பிடித்த டிபன் கிடைக்காது. நாமாகவே பண்ணினால் நமக்கு பிடித்தை சமைத்து சாப்பிடலாம்)

நண்பர்கள் மற்றும் குடும்பதினர் முன்னும் உங்கள் மனைவியின் செயல்களை பாராட்டி பேசுங்கள்.(அப்படி பேசமால் வேறு ஏதாவது பேசினால் பூரி கட்டையால் அடி வாங்க ரெடியாக இருங்கள்).(அப்படி பேசவில்லை என்றால் நீங்கள் அடையப் போகும் துன்பங்களூக்கு அளவே இல்லை) அதன் பயன் உங்கள் வாழ்வில் நன்றாக தெரியும்.

அதுபோல உங்கள் மனைவி இல்லாத போது மனைவியின் நண்பர்களை சந்தித்தால் அப்போதும் மிகவும் பாராட்டி பேசுங்கள். அது அவர்களின் காதுக்கு எளிதாக சென்று அடையும் போது அவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை

சிறிய சிறிய செலவு இல்லாத பரிசுப் பொருட்களை வாங்கி தரலாம்.உதாரணத்திற்கு தலையில் வைக்கும் கிளிப்புகள். ஹேண்ட் கர்ச்சீப். சிரிய முகம் பார்க்கும் கண்ணாடி. etc……இது அவர்களை நாம ஸ்பெஷலாக நடத்துவதை உணர்த்தும்.

( அவர்கள் யாரிடமும் நாம் ஓன்றும் வாங்கித் தரவில்லை என்று குறையில் இருந்து தப்பலாம். இது ரொம்ப சீப்பான பரிசு என்று கூறினால் பரிசைத்தான் பார்க்கனும் பரிசின் மதிப்பை பார்க்க கூடாது என்று அட்வைஸ் தாருங்கள்)

அதுபோல அவர்களின் ஹேண்ட் பேக்குகளில் சாக்லேட் ஒன்றை வைத்து ஒரு சிறிய நோட் எழுதி அல்லது ஒரு நல்ல கவிதையை எழுதி அவர்களுக்கு தெரியாமல் வைக்கவும். கவிதை எழுத தெரியவில்லையென்றால் நெட்டில் இருந்து திருடலாம்

இரவில் படுக்க செல்லும் போது மென்மையாக கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் தலைமுடியை கோதிவிடவும். இதை விட அவர்களுக்கு சந்தோசம் ஏதும் கிடையாது( இதனால் நமக்கு கிடைக்கும் பலன் அவர்கள் சீக்கிரம் தூங்கிவிடுவார்கள் .

நாமும் நிம்மதியாக எந்த வித தொந்தரவும் இல்லாமல் நிறைய நல்ல பதிவுகள் போடலாம். நண்பர்களீன் பதிவுகளை படித்து கமெண்ட்ஸ் போடலாம்., ஆபிஸ் வேலை ஏதும் இருந்தால் நிம்மதியாக செய்து முடிக்கலாம்)
இந்த அட்வைஸ் எல்லாம் கணவர்களூக்காக போட்டுள்ளேன்.

இதை பெண்கள் வந்து படித்து இருந்தால் இதை ப்ரிண்ட் செய்து கணவரின் சட்டை பையில் வைக்கவும். அல்லது இந்த அட்வைசை படித்து சிறிது மாற்றம் செய்து ,கடைப்பிடித்து அவரையும் ஸ்பெஷலாக நடத்துங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கான சில ஆரோக்கிய குறிப்புகள்…!!
Next post யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்..!!