சிவா படத்துக்காக எடையை குறைக்கிறாரா அஜித்?
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காக அஜித் உடல் எடையை குறைக்கப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
‘வீரம்’, ‘வேதாளம்’ என அஜித்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ‘வேதாளம்’ படத்திற்கு பிறகு அஜித்துக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார் அஜித்.
இதற்கிடையில், அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டார் சிவா. இந்நிலையில், கிட்டத்தட்ட படப்பிடிப்பை தொடங்க அனைவரும் ஆயத்தமாகியுள்ளனர். இப்படம் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அஜித் உடல் எடை கூடியுள்ளதால், கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என சிவா, அஜித்திடம் கூறவே, தற்போது அதற்காக அஜித் ஜிம்மிற்கு சென்று தனது உடல் எடையை குறைக்கும் பணியை மேற்கொண்டுள்ளாராம்.
Average Rating