பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய பெண்ணிற்கு 98 லட்ச ரூபாய் அபராதம்..!!

Read Time:4 Minute, 33 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)கனடா நாட்டில் பேஸ்புக்கில் தவறான தகவல் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 98 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Abbotsford என்ற நகரில் கேத்தரின் வான் நெஸ் என்ற பெண்மணி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு அருகில் டக்ளஸ் பிரிட்சார்ட் என்ற நபரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் உள்ள ஒரு இசைப்பள்ளியில் டக்ளஸ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கேத்திரின் வீட்டிற்கு பின்புறம் ஒரு நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் நள்ளிரவு நேரங்களிலும் நீர்வீழ்ச்சி போல தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்துள்ளது.

இதனால் வெளியாகும் சத்தத்தால் டக்ளஸ் மற்றும் அவரது மனைவி இரவில் தூங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கேத்தரின் வீட்டிற்கு டக்ளஸ் சென்றுள்ளார். ‘தயவு செய்து இரவு நேரத்தில் உங்கள் நீச்சல் குளத்தில் தண்ணீரை திறந்து விடாதீர்கள். அதில் வெளியாகும் ஓசையால் எங்களால் தூங்க முடியவில்லை’ என டக்ளஸ் பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், கேத்தரின் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தினமும் நள்ளிரவில் தண்ணீரை திறந்து விட்டு வந்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த டக்ளஸ் நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். டக்ளர் தன் மீது புகார் கொடுத்துள்ளதை அறிந்த கேத்தரின் அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள ஒரு கண்ணாடி ஜன்னலை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இந்த கண்ணாடியின் மறுபுறம் அந்த நபர் ரகசிய கமெரா பொருத்தியுள்ளார். அந்த கமெரா மூலம் என குழந்தைகளை ஆபாசமாக பார்த்து வருகிறார்’ என பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய கேத்தரினின் நண்பர்கள் அந்த பதிவை பரபரப்பாக பகிர்ந்துள்ளனர். காட்டுத்தீ போல பரவிய இந்த தகவல் டக்ளஸ் பணியாற்றிய பள்ளிக்கும் சென்று அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.

இதனால் மன உளைச்சல் அடைந்த டக்ளஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் கண்ணாடிக்கு பின்புறம் எந்த கமெராவும் வைக்க வாய்ப்பில்லை என்பது நிரூபணம் ஆனது.

அதே சமயம், கேத்தரின் மீது நகராட்சி அதிகாரிகளிடம் டக்ளஸ் கொடுத்திருந்த புகாருக்கு பழிவாங்கவே அவர் மீது கேத்தரின் அவதூறு பரப்பியது நிரூபணம் ஆனது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, ‘ஆசிரியரின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டது மிகப்பெரிய குற்றம்.

இதனால், ஆசிரியரின் எதிர்காலமே இருண்டுள்ளது. எனவே, இந்த குற்றச்செயலில் ஈடுப்பட்ட கேத்தரினுக்கு 67,500 டொலர்( 98,63,775 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், கேத்தரினின் வீட்டுக்கு பின்னால் உள்ள நீச்சல் குளத்தில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை தண்ணீரை திறந்து விடக்கூடாது என்று கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்டொனால்ட் சிலையை திருடியது யார்? கண்டுபிடிக்கும் நபருக்கு 2 லட்சம் பரிசு…!!
Next post குடிமக்களின் உயிரை காக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது சரியா…?