ரதுபஸ்வல மனு மீதான விசாரணை நிறைவு…!!
Read Time:1 Minute, 15 Second
ரதுபஸ்வல பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலையை மூடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை நிறுத்திக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் வல்லுனர்களால் தாக்கல்செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ள ரதுபஸ்வல தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதி விஜித் மல்லேகொடதெரிவித்துள்ளார்.
இதனால் மனுவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்தும் விசாரணை செய்வது தேவையற்றது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating