விபத்து – சிறுமி பலத்த காயம்…!!
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவெரலியா பிரதான வீதியில் 29.04.2016 அன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு அவிசாவளையிலிருந்து நுவரெலியாவை நோக்கி சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் அட்டன் குடாகம பகுதியில் தேநீர் பருகுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பஸ்ஸில் இருந்து சிறுமி ஒருவர் இறங்கி வீதியை கடக்க முயன்ற வேளையில் மேற்படி சிறுமி குடாகம பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்களில் மோதுண்டுள்ளார்.
இவ்வேளையில் பலத்த காயங்களுக்குள்ளான சிறுமி ஏனையவர்களின் உதவியுடன் கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating