திருகோணமலையில் விபத்து: 3 பிள்ளைகளின் தாய் பரிதாபப் பலி…!!
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் (28.04.2016) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற முற்சக்கர வண்டியுடன் – டிமோ பட்டா மோதியதில் முற்சக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து கஹடகஸ்திகிலியவிற்கு செல்லும் போது மஹாதிவுள்வெவ குளத்துக்கு அருகிலுள்ள வளைவில் வேகமாக வந்த டிமோ பட்டா லொறி முற்சக்கர வண்டியுடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த பெண் கஹடகஸ்திகிலிய- ஈத்தல்வெட்டுனுவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜமால்தீன் முசீதா உம்மா (37) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முற்சக்கர வண்டியின் சாரதியான அதே இடத்தைச்சேர்ந்த ஜ.பைரூஸ் (29) மற்றும் கணவரான ஏ.ஏ.சலாம் (45) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
டிமோ பட்டா லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating