நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..!!
Read Time:1 Minute, 21 Second
நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அதில் சென்ற அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நார்வே நாட்டின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து இன்று பெர்ஜன் நகருக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் 11 ஊழியர்கள் உள்பட 13 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.
விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating