வயதானாலும் ஆண்மையுடன் இருக்க, ஆண்கள் செய்ய வேண்டியவை..!!

Read Time:3 Minute, 29 Second

timthumbவயதானாலும் ஆண்மையுடன் இருக்க சரியான உணவும், உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆண்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் மறைமுக தாக்கமாக இருந்து வருகிறது டெஸ்டோஸ்டிரோன்.

எனவே, டெஸ்டோஸ்டிரோன் அளவை உடலில் ஆண்கள் சரியாக பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்…

உடல் எடையை உங்கள் உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ப பராமரித்தல். சமீபத்திய ஆய்வு ஒன்று, உடல் எடை அதிகமாக இருக்கும் ஆண்களிடம் தான் அதிகமாக ஆண்மை குறைவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. எனவே, உடல் எடை மீது அதிக அக்கறை அவசியம்.

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். எடை தூக்கி உடற்பயிற்சி செய்வது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை இயற்கையாக அதிகரிக்க பயனளிக்கிறது.

டெஸ்டோஸ்டிரோன் உடலில் உருவாக ஜின்க் சத்து மிகவும் அவசியம். எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கீரை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பசலைக்கீரையில் ஜின்க் சத்து அதிகம் இருக்கிறது.

அதிகாலையில் சூரிய வணக்கம், யோகா, அல்லது நடைபயிற்சி செய்யுங்கள். டெஸ்டோஸ்டிரோன் அளவை சரியான அளவில் பராமரிக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. அதிகாலை சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு அதிகமான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது.

அதிகமாக மன அழுத்தம் கொள்ள வேண்டாம். கோவம் அல்லது அலுவலக வேலை பளுவின் காரணமாக அதிகம் மன அழுத்தம் கொள்ள வேண்டாம், இது உங்கள் டெஸ்டோஸ்டிரோனை வலுவாக பாதிக்கும்.

அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டரியப்பட்டுள்ளது. எனவே, அதிகமாக சர்க்கரை / இனிப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டாம். உங்கள் உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்க உதவுகிறது.

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் உணவுகளை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வதால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க முடியும். அதிகமான காபி வேண்டாம். ஏனெனில், அதிகமாக காபி பருகுவதால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைக்கப்படுகிறது.

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு சீரான முறையில் இருக்க வேண்டும் எனில் நல்ல உறக்கம் தேவை. தூக்கமின்மையும், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைபாட்டிற்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எறும்பு கடித்ததால் 4 நாட்களே ஆன சிசு உயிரிழப்பு…!!
Next post 27 வயது காதலனால் கர்ப்பிணியாக்கப்பட்ட 14 வயது மாணவி…!!