இந்தோனேசியா கடற்பகுதியில் (8) பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

Read Time:2 Minute, 2 Second

201606161214254008_8-Pilot-Whales-Dead-In-Indonesia_SECVPFஇந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் 8 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. மேலும் ஏராளமான திமிங்கலங்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

திமிங்கலங்கள் ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு திமிங்கலம்தான். இவற்றில் 80-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் பைலட் வகையிலான 8 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

“முதலில் ஒன்று அல்லது இரண்டு திமிங்கலங்கள் கரை அருகே நீந்திக் கொண்டிருந்தன. பொதுவாக, திமிங்கலங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவை கரை அருகே வந்துவிடும். மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று உள்ளூர் கடல்வழி மற்றும் மீன்பிடி அலுவலக அதிகாரி டெடி இஸ்பேண்டி கூறியுள்ளார்.

மேலும், “நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மீனவர்களும், அரசு அதிகாரிகளும் கரையில் தத்தளித்த திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டு விடும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இருப்பினும் காலையில் 8 திமிங்கலங்கள் கரையில் இறந்து கிடந்தன” என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க..!!
Next post இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்..!!