14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்ட பெண் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்…!!

Read Time:3 Minute, 36 Second

01-1427887957-cover-16-1466054053பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர்.

இது ஓர் அரும்பெரும் மருத்துவ உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடற்சக்தியை வலுப்படுத்த பேரிச்சம் பலம் உதவுகிறது.

இந்த பெண், தொடர்ந்து 14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் உண்டு வர முடிவு செய்தார். 14 நாட்களின் முடிவில், இந்த பெண்மணியின் உடல் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு இருந்தது.

14 நாட்கள் கழித்து இந்த பெண்ணிடம் ஏற்பட்ட ஆரோக்கிய மாற்றங்கள்… செரிமானம்: தொடர்ந்து 14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்ததால், குடல் இயக்கம் சிறந்து, செரிமானம், வாயுத்தொல்லைகள் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, பெருங்குடல் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் இருக்க பயனளிக்கிறது.

வலிநிவாரணி: பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக விளங்குகிறது. இது வலிநிவாரணியாகவும், கை கால் வீக்கத்தை குறைக்கவும் பெருமளவு உதவுகிறது. மேலும், மெக்னீசியம் இதய நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது.

உயர் இரத்த அழுத்தம்: பேரிச்சம்பழத்தில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவுகின்றன. மேலும் தொடர்ந்து பேரிச்சம்பழம் உண்டு வருவது 10% ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்கிறது.

அறிவாற்றல்: பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது. இதனால், ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் அதிகரிக்கிறது.

மேலும், கர்ப்பிணிப்பெண் வலி இன்றி சுகப்பிரசவம் அடைய, கடைசி மாதம் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம் என கூறப்படுகிறது. மேலும், பேரிச்சம்பழம் பிரசவத்திற்கு பிறகான உடல் எடையை குறைக்கவும் பலனளிக்கிறது.

எனவே, இவ்வளவு அரும்பெரும் நன்மைகளை அளிக்கும் பேரிச்சம் பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டு வர மறக்க வேண்டாம். பேல்பூரி, காளான், பெப்ஸி, கோலாவிற்கு செலவழிப்பதை, நல்லவழியில் செலவழித்து ஆரோக்கியம் மேன்மையடைய முயற்சி செய்யுங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்து குரலில் ஒரு கலக்கல் காமெடி… சிரிப்பதற்கு தயாரா? -வீடியோ
Next post கீழக்கரை அருகே ஸ்கூட்டர்-லாரி மோதி விபத்து: 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி…!!