By 30 June 2016 0 Comments

இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்­டை விட்டு ஓடிய தங்­கையை கொலை செய்த சகோ­தரன்…!!

17673malaதிரு­ம­ண­மாகி இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்டை விட்டு ஓடி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த சகோ­தரன் சகோ­த­ரியை வெட்­டிக்­கொலை செய்த சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் நெல்லை மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே உள்ள மேல மூன்­றடைப்பைச் சேர்ந்­தவர் கணேசன் என்ற சிதம்­பரம்(50) அரச பஸ் நடத்­து­னர் இவ­ரது மனைவி சாந்தி (42). இவர்­க­ளது மகன்கள் கிருஷ்­ண­ராஜா (25), செல்வம் (23), மகள் மாலா (22). இதில் கிருஷ்­ண­ராஜா சென்னை வண்­ணா­ரப்­பேட்டை தீய­ணைப்பு நிலை­யத்தில் தொழில் புரி­கிறார்.

மாலா பாளை­யங்­கோட்டை கே.டி.சி நகர் அருகில் உள்ள தனியார் கல்­லூ­ரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.தினமும் பஸ்ஸில் கல்­லூ­ரிக்கு சென்று வந்தார்.

ஆழ்­வார் ­நே­ரியைச் சேர்ந்த சார்ல்ஸ் என்­பவர் நெல்லை புதிய பஸ் நிலை­யத்தில் உள்ள ஒரு பழக்­க­டையில் வேலை செய்­கிறார். இவ­ருக்கு திரு­ம­ண­மாகி மனைவி மற்றும் இரு குழந்­தைகள் உள்­ளனர்.

பஸ்ஸில் வேலைக்கு சென்ற போது சார்­ல­ஸுடன் மாலா­வுக்கு பழக்கம் ஏற்­பட்­டது. இரு­வரும் அடிக்­கடி செல்போன் மூலம் பேசி வந்­துள்­ளனர். அவ­ரது கடைக்கு அடிக்­கடி சென்ற மாலா ஜுஸ் குடித்து பேசிக்­கொண்­டி­ருப்­பதை வழ­மை­யாக கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் இவர்­க­ளது காதல் விவ­காரம் தெரிந்து பெற்றோர் கண்­டித்­தனர். இதன் பின்னர் மாலா கல்­லூ­ரிக்கு செல்­வதை நிறுத்­தி­யுள்ளார்.

கடந்த இரு மாதத்­திற்கு முன் மேலப்­பா­ளை­யத்­தி­லுள்ள பாட்டி வீட்­டிற்கு செல்­வ­தாக கூறிச் சென்ற மாலா பின்னர் வீடு திரும்­ப­வில்லை. அதே நேரத்தில் சார்­ல்ஸும் தலை­ம­றை­வானார்.

இது குறித்து மாலாவின் பாட்டி மேலப்­பா­ளையம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். சார்­ல்ஸின் குடும்­பத்­தி­னரும் மூன்­ற­டைப்பு பொலிஸில் முறைப்­பாடு செய்­தனர்.

பொலிஸார் இரு­வ­ரையும் தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். அலைந்­தனர். இறு­தி­யாக கோவை அருகே தங்­கி­யி­ருந்த இரு­வ­ரையும் கண்­டு­பி­டித்­தனர்.

பின்னர் இரு வீட்­டா­ரையும் அழைத்து பேசிய பொலிஸார் மாலாவை பெற்­றோ­ருடன் அனுப்பி வைத்­துள்­ளனர். பின்னர் சார்­ல்ஸை அவ­ரது மனைவி அழைத்துச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில், கிருஷ்­ண­ராஜா விடு ­மு­றையில் சில நாட்­க­ளுக்கு முன் சொந்த ஊர் வந்தார். தனது தங்கை காதல் விவ­காரம் தெரி­ய­வந்­ததால் மாலாவை உற­வி­ன­ருக்கு திரு­மணம் செய்து கொடுக்க ஏற்­பாடு செய்­தனர்.

தனக்கு திரு­மணம் வேண்டாம் என்று மாலா கூறி­யுள்ளார். தனது தங்­கையை சமா­தா­னப்­ப­டுத்தி திரு­ம­ணத்­திற்கு சம்­ம­திக்க வைக்கும் முயற்­சியில் ஈடு­பட்டார்.

இதன் போது கிருஷ்­ண­ரா­ஜா­விற்கும் மாலா­விற்கும் கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆத்­தி­ர­ம­டைந்த கிருஷ்­ண­ராஜா, வீட்டில் கிடந்த அரி­வாளால் மாலாவை வெட்­டி­யுள்ளார். படு­காயம் அடைந்த மாலாவை நெல்லை வைத்­தி­ய­சா­லையில் சேர்த்­தனர்.

சிகிச்சை பலன் அளிக்­காமல் மாலா உயி­ரி­ழந்தார். இது­கு­றித்து மூன்­ற­டைப்பு பொலிஸார் வழக்­குப் ­ப­திவு செய்து, கிருஷ்­ண­ரா­ஜாவை தேடி வரு­கின்­றனர்.

இத­னி­டையே இந்த கொலை உற­வி­னர்­களின் தூண்­டு­த­லாலேயே இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. மாலாவும், சார்­ல்ஸும் வெவ்வேறு சமூ­கத்தை சேர்ந்­த­வர்கள். மேலும் ஏற்­க­னவே திரு­ம­ண­மா­ன­வரை காத­லித்­ததால்

மாலா­வுக்கு அவ­ரது குடும்­பத்­தினர் அவ­சர அவ­ச­ர­மாக உற­வுக்­கார மாப்­பிள்­ளையை திரு­மணம் செய்து வைக்க ஏற்­பாடு செய்­தனர். இந்த விவ­காரம் தங்­க­ளுக்கு மானப்­பி­ரச்சினை என்றும் இதை விட்டு வைக்கக்கூடாது என்றும் கிருஷ்ணராஜாவிடம் அவரது உறவினர்கள் தெரி­வி­த்­துள்ளனர்.

இதனால் வெறுப்படைந்த கிருஷ்ணராஜா ஒரே தங்கை என்றும் பார்க்காமல் மாலாவை வெட்டிக்கொலை செய்துள்ளார் எனக் கூறப்­ப­டு­கி­ற­து.Post a Comment

Protected by WP Anti Spam