அதிக அன்னியச் செலவாணியை கொண்டுவரும் வௌிநாட்டவர்களுக்கு வதிவிட விசா..!!

Read Time:2 Minute, 33 Second

94997882Untitled-1அந்நியச் செலவாணிகளை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசாவினை வழங்க 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக் கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளது என, இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.

பிரேரிக்கப்பட்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தின் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை இங்கு முதலிடும் முதலீட்டாளர்களுக்கு 10 வருட வதிவிட விசாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதற்காக குறித்த தொகையினை 10 வருட காலத்துக்கு சம்பந்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்கில் பேண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நன்மைகளை கொண்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் போராளிகள் சிலர் மரணமடைந்த சம்பவம் குறித்தும், அவர்களுக்கு இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த சேனராத்ன இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தான் கேள்வியுற்றுள்ளதாகவும், தேவை ஏற்படின் இது குறித்து விசாரிக்க வைத்தியர்கள் குழுவை வடக்கிற்கு அனுப்பத் தாயர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிணையில் விடுவிக்கப்பட்ட தயா மாஸ்டர் விளக்கமறியலில்..!!
Next post 17 மாணவிகள் துஷ்பிரயோகம் – இருவர் கைது..!!