வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?

Read Time:3 Minute, 12 Second

Hot-Water-Drinkingநம்மில் பலரும் நோய்வந்தால் மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் வெந்நீர் பருகி வந்தால் கிடைக்கும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் தினமும் காலையில் சுடுதண்ணீரில் எலுமிச்சையை கலந்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், சுவீட், போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு கரிக்க தொடங்கும். அப்போது ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகினால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்து விடும்.

மேலும் தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும்.இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். வெந்நீரில் சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் ஆகியவை போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் கனிசமாக குறையும். குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் வெந்நீரே சிறந்த மருந்தாக செயல்படும்.

மேலும் வெந்நீர் பருகுவதால் உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.வெந்நீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். தலையில் உள்ள பொடுகையும் கட்டுபடுத்தும்.

முக்கியமாக, வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும். இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும், வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும். எனவே தினமும் வெந்நீர் பருகுங்கள், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்…!!
Next post சவுதிக்கு சென்று இலங்கை திரும்பினால் 4 இலட்சம் அபராதம்..!!