தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்…!!

Read Time:3 Minute, 23 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை.

வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலை ஆகும்.

காலையில் தினமும் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

பொதுவாக தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, நம்முடைய கஷ்டங்களை மறந்து உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடுதல் வேண்டும்.

தியானம் தினமும் செய்தால், உடலும், மனமும் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் மற்றும் சுறுசுறுப்புடனும் காணப்படும்.

நாம் தியான நிலையில் இருந்து சுவாசிக்கும் போது, தூய்மையான காற்று உள்ளே சென்று மார்பு பகுதியை விரிவடையச் செய்து, கோபம் வராமல் கட்டுப் படுத்துகிறது.

நாம் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
தீய எண்ணங்களை விரட்டி, நல்ல எண்ணங்களின் செயல்பாட்டை கொண்டு வந்து, மனதிற்கு உற்ச்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தருகிறது.

மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட வைக்கிறது.

கவலைகளைப் போக்கி சகிப்புத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது.

நம் மனதை அமைதிபடுத்தி, படிப்பு மற்றும் வேலைகளில் கவனங்களை அதிகரிக்கச் செய்கிறது.

தசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோயகள் வராமல் தடுக்கிறது.

ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூழலைக் காக்க இலவசமாக பயன்தரு மரங்கள் விநியோகிப்பு…!!
Next post கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு…!!