மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவனுக்கு மரண தண்டனை…!!

Read Time:2 Minute, 41 Second

201609081534159356_accused-sentenced-to-death-in-acid-attack-case_secvpfடெல்லியைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி(23) என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனையில் பணிபுரிய மும்பை பந்தரா ரெயில் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வந்திறங்கியபோது அவர் மீது ஒரு மர்ம நபர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், படுகாயமடைந்த ரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று டெல்லியில் இருந்து பிரீத்தி பயணித்த அதே ரெயிலில் வந்த ஒருவர் ரதி மீது ஆசிட் வீசியதாக தெரியவந்தது.

இதையடுத்து, ரதியின் வீட்டருகே வசித்துவந்த அன்குர் லால் பன்வார் என்பவனை கைது செய்த போலீசார் அவன்மீது மும்பையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அன்குர் லால் பன்வார் குற்றவாளிதான் என்பதை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் உறுதி செய்திருந்தது.

தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்ற நிலையில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி அன்குர் லால் பன்வாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் வயதில் தாடி, மீசை வளர்த்த இந்திய சீக்கிய பெண்: கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்…!!
Next post ஜார்ஜியாவில் விமானங்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு..!!