ஜார்ஜியாவில் விமானங்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு..!!

Read Time:2 Minute, 8 Second

201609081738086765_3-dead-when-2-planes-collide-in-air-at-small-georgia-airport_secvpfஅமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள காரோல்டானில் மேற்கு ஜார்ஜியா பிராந்திய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம், தலைநகர் அட்லாண்டாவில் இருந்து சுமார் 45 மைல் தொலைவில் உள்ளது.

இங்கு ஒற்றை என்ஜின் கொண்ட இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. ஓடுபாதைக்கு மிக அருகாமையில் நடந்த இவ்விபத்தில் விமானங்களில் பயணித்த 3 பேரும் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானங்கள் ஓடு பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாகவும் இரு விமானங்களும் தரையிறங்க முயற்சித்த போது விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானங்கள் டைமண்ட் ஏர்கிராப்ட் டிஏ20சி1 மற்றும் பீச் எப்33ஏ ரகத்தை சேர்ந்தவை என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவனுக்கு மரண தண்டனை…!!
Next post உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க…!!