பெண்களை ரகசியமான முறையில், வீடியோ எடுத்த மர்மநபர் செய்த விபரீத காரியம்..!!
பெண்களை ரகசியமான முறையில் வீடியோ எடுத்த மர்மநபர் செய்த விபரீத காரியம்..!!
சுவிட்ஸர்லாந்தில் பெண்களின் கால்களை ரகசியமான முறையில் வீடியோவில் பதிவு செய்து அதனை ஆபாச இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் இளம் பெண்களுக்கு அருகில் அமர்ந்து மறைத்து வைத்திருக்கும் வீடியோ கேமரா மூலம் இந்த நபர் பெண்களின் கால்களை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெண்கள் செல்லும் ரயில் பெட்டிகளில் அவர்களை பின்தொடர்ந்து வீடியோவில் பதிவு செய்துள்ளார். பெண்கள் கண்டறிய முடியாத படி இந்த நபர் அவர்களை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
சுவிஸர்லாந்தின் கிரிஷன்ஸ் பிராந்தியத்தில் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் பெண்கள், ரயில் நிலையங்களில் இருக்கும் பெண்கள் என குறித்த நபர் டஜன் கணக்கான படங்களை பிடித்துள்ளார்.
பெண்களின் கால்கள் மாத்திரமல்லாது அவர்களில் சிலரது முகங்களும் பதிவாகியுள்ளன. இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
வீடியோக்களை பதிவேற்றியுள்ள நபர் குறித்து தென்கிழக்கு சுவிட்ஸர்லாந்து கிரிஷன்ஸ் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இது குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றம் அல்ல என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆனால் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களை வீடியோவில் பதிவு செய்து ஆபாச இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளமை தவறானது எனவும் இதன் மூலம் பெண்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனால், தனிப்பட்ட உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
Average Rating