இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை சீனா செலுத்தியது…!!

Read Time:2 Minute, 27 Second

201609161431364567_china-launches-second-experimental-space-lab-module_secvpfராணுவ பலத்துக்கு அடுத்தபடியாக விண்வெளியிலும் தனது வல்லமையை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ள சீனா இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை நேற்றிரவு சுமார் 10 மணியளவில் சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் ’ஷெங்ஸோ 11’ விண்கலத்துடன் ‘டியாங்காங் 2’ இணைக்கப்படும். அதில் செல்லும் இரண்டு விஞ்ஞானிகள் சுமார் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளவு வேலையில் ஈடுபட்ட தம்பதிகள் 2 வருடத்திற்கு பின் விடுதலை…!!
Next post டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழிப்பு: 4 வாலிபர்கள் கைது…!!