ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் தப்பாட்டம்…!!

Read Time:3 Minute, 38 Second

201609201550065639_jk-ritheesh-produce-new-movie_secvpfநடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் நன்கு அறியப்பட்டவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் சொந்தமாக சாகியா செல்லுலாய்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘தப்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக துரை சுதாகர் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார்.

முஜிபூர் என்பவர் இப்படத்தை இயக்குவதுடன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் துளசி ரூபி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சினைகளை சமாளிக்க முடிந்ததா? மீண்டு வந்தார்களா? என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி மிகவும் எதார்த்தமாக வடிவமைத்துள்ளாராம் இயக்குனர்.

மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையும் இப்படம் ஆணித்தனமாக கூறும்படி இருக்கும். இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980 பிண்ணனிகளில் நடக்கும்படியாக கதை இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும்படியாக அமையும் என்று நமபிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் முஜிபூர்.

முஜிபூர் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடன் பணியாற்றியவர். இதற்கு மூன் ‘இரு நதிகள்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். கதாநயாகனான துரை சுதாகர் இப்படத்தில் தப்பாட்ட கலைஞராக வருகிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார்.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிட மும்முரமாக செயல்ப்பட்டு வருகின்றனர். பழனி பாலு இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் முக அமைப்புக்கு பொருத்தமான ஹேர்ஸ்டைல்கள் எது…!!
Next post பொலிஸாருக்கு பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சகோதரர்களின் நிலை…!!