யாழில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சிறுமி – வளர்ப்புத் தாய் கைது…!!

Read Time:1 Minute, 55 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூக்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் சிறுமி ஒருவரை மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த காணொளி வெளியாகிய சில மணி நேரத்தில் சிறுமியை தாக்கியதாக கூறப்படும், சிறுமியின் வளர்ப்புத் தாயை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால், தந்தைய வேறு திருமணம் முடித்த நிலையில், அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மூர்க்க தனமாக தாக்கியுள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்! உண்மைத் தகவல் வெளியானது…!!
Next post இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்…!!