ஓடும் பஸ்சில் மலர்ந்த காதல்: பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது…!!

Read Time:3 Minute, 15 Second

201609230959056096_plus-2-girl-student-marriage-painter-arrest-in-salem_secvpfசேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22) பெயிண்டர். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம்.

அப்போது அவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராணி (வயது 17 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராணி சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

ராணியும், கார்த்திக்கும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதை அறிந்த ராணியின் பெற்றோர் அவரை கண்டித்தனர். ஆனால் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பழகி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராணி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். இதை அறிந்த அவரது பெற்றோர் ராணி படிக்கும் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராணியை உறவினர்கள் வீடுகளில் தேடினர். அங்கும் அவர் இல்லை. பின்னர் இந்த சம்பவம் குறித்து சேலம் அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுலேகா, சப்-இன்ஸ்பெக்டர் உமாராணி மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது பள்ளிக்கு வந்த ராணியை கார்த்திக் கடத்தி சென்று நங்கவள்ளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது.

பின்னர் இவர்கள் பழனி மற்றும் பல ஊர்களுக்கு சென்று விட்டு சேலம் திரும்பினர். இவர்களை கண்காணித்த போலீசார் கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராணிக்கு வயது 17 ஆவதால் பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்து அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ராணி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பிளஸ்-2 மாணவி கடத்தி திருமணம் செய்த சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…!!
Next post குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா: சமந்தா…!!