திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை குத்தி கொன்றேன்: கைதான கணவன் வாக்குமூலம்…!!

Read Time:2 Minute, 59 Second

201609231257327826_paramour-issue-wife-murder-husband-arrest-near-tiruppattur_secvpfதிருப்பத்தூர் அடுத்த பெரிய குளமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 46). டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி சுமதி (36). இவர்களுக்கு மதன் (16) என்ற மகனும், கோகிலா (14) என்ற மகளும் உள்ளனர்.

மதன், அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கோகிலா, அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வழக்கம் போல் 2 பேரும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

வீட்டில் ராஜா, மனைவி சுமதியுடன் இருந்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜா, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதையடுத்து, மனைவியை கொன்ற கத்தியுடன் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) மணிகண்டன் முன்பு சரணடைந்தார். ராஜாவை அவர், திருப்பத்தூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தார்.

திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கொலையுண்ட சுமதியின் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரணடைந்த ராஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராஜா அளித்த வாக்குமூலம்:-

எனது மனைவி சுமதிக்கும், திருப்பத்தூர் பொன்னி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இந்த விவகாரம் எனது காதுக்கு எட்டியது. கள்ளக்காதலை கைவிடும் படி கூறி மனைவியை கண்டித்தேன். காதலன் மணிகண்டனை எச்சரித்தேன். ஆனால் கள்ளத்தொடர்பை 2 பேரும் நீட்டித்தனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த நான், சுமதியை குத்தி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் ராஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாஸ்கோ தீவிபத்தில் சிக்கி 8 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாப பலி…!!
Next post பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!