மணலியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை: மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்…!!

Read Time:3 Minute, 5 Second

201609241204508166_3-person-self-immolation-in-manali_secvpfமணலி சின்ன சேக்காடு பெத்தபிரான் தெருவை சேர்ந்தவர் வேதகிரி (வயது 65). விம்கோ தீபெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

தற்போது கண் பார்வை குறைந்து அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி ஜோதி (50). இந்த தம்பதிக்கு விபா (26), ஜெபகனி (24) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

விபா பி.காம். படித்து விட்டு பாரிமுனையில் உள்ள ஒரு கடையிலும், ஜெபகனி தனியார் பல் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென விபாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் குணம் ஆகவில்லை. பின்னர் வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் வேதகிரி தனக்கு கண் பார்வை சரியில்லை, மகளுக்கும் சிகிச்சை அளிக்க பணம் இல்லை. இதனால் தான் வாழ்வதை விட சாவதே மேல் என உறவினர்களிடம் புலம்பி வந்தார். மேலும் பண கஷ்டத்தில் இருந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த வேதகிரி தனது மனைவி ஜோதியுடன் வீட்டிற்குள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த ஜெபகனியும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

நடு இரவில் 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் மணலி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் கரிக்கட்டையாக இறந்து கிடந்தனர்.

இது குறித்து மணலி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மணலி தீயணைப்பு துறையினரும் வந்தனர். அதற்குள் எல்லாம் எரிந்து முடிந்துவிட்டது. விபா சிகிச்சைக்காக வேலூரில் தங்கி உள்ளதால் அவர் மட்டும் உயிர் தப்பினார்.

மணலியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவள்ளூரில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது…!!
Next post யாழ் “எழுக தமிழ்” நேரலைத்தொகுப்பு…!! (வீடியோ காட்சிகள் & படங்கள்)